திரும்பிவந்தவள்   

எஸ். ஸ்ரீதுரை     

துப்பாக்கிச் சத்தம் பீரங்கி வெடியோசை

அடுத்த நொடிக்குள் ஆயிரம் சாவென்று

வான்மழை பொய்த்த வாய்க்கரிசி பூமியின்

குண்டுமழையினின்று மீண்டாகிவிட்டது.

தனிவிமானத்திலிருந்து தரை இறங்கியாயிற்று….

மறுபடியும் அதேமுகங்கள் –

முறைக்கின்ற மாமியார்;

குவார்ட்டரே வாழ்க்கையென

குடிக்கின்ற புதுக்கணவன் அல்லது

பழைய காதலன்;

சுகமெதுவும் பார்த்ததில்லை;

சூல்கொள்ளவும் மனமில்லை;

இன்னொரு வாய்ப்பு….?

அது ஆப்கானாயிருந்தாலும் சரி….

**** **** **** ****

Series Navigationஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம்முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​  நெடுங்கதை​)   படக்கதை – 16