தீப்பற்றிக் கொள்ளும் வார்த்தை

இவள் பாரதி

எப்போதும் தீப்பற்றிக் கொள்ளும்
வார்த்தைகள்தான் வீசப்படுகின்றன

எதிர்கொள்கிற என்னிடமிருக்கும்
பஞ்சுபோன்ற வார்த்தைகள்
பற்றி எரிகிறது பலத்த சத்தத்துடன்..

அந்த நெருப்புப் பொறியில்
எல்லோரையும் பற்றும் தீ
கடைசியில் சாம்பலாகிறது
கொஞ்சம் சமாதானத்துடனும்
நிறைய சச்சரவுகளுடனும்

Series Navigationஅமீரின் ஆதிபகவன் – “கலாச்சார தீவிரவாதத்தின் உச்சம்”சிலம்பில் அவல உத்தி