துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழா

Spread the love

துபாய் : துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஜூன் 6ம் தேதி மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

துவக்கமாக எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட துணை முதல்வர் மணிகண்டன் வரவேற்புரை வழங்கினார்.

DSC_0404

DSC_0152

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருமதி மீனா சிவராமன் வந்திருந்து வாழ்த்தினார்.

எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட முதல்வர் நாகப்பன் பள்ளியின் சிறப்பு குறித்தும், வளர்ச்சி குறித்தும் இப்பணிக்கு கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை விவரித்தார். பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்கள் சான்றிதழும், பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவ, மாணவியரின் தமிழாற்றல் குறித்து அனைவரும் வியந்து பாராட்டினர்.

எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளி மதம், இனம், அரசியலுக்கு அப்பாற்பட்டு சிறப்பாக நடை பெறுவது பற்றி அனனத்து பெற்றோர்களும் தங்கள் நன்றியையும், பாராட்டுக்களையும்தெரிவித்துக் கொண்டனர்.

பொருளாளர் ஸ்ரீனிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

முத்துமாணிக்கம் மற்றும் தேவி ரமேஷ் ஆகியோர் நிகழ்வினை தொகுத்து வழங்கினர்.

Series Navigation