தூக்கத்தில் அழுகை

ஹிந்தியில் : சவிதா சிங்
தமிழில் : வசந்ததீபன்
 
நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று
என்னுடன் வருகின்றன என் கனவுகள்
சேர்கின்றன எனது மகிழ்ச்சியில்
விரக்தியில் எனது சோர்விலும் இடைவிடாமல் ஒரு கவலையுடன். 
 
சொல்கின்றன எனக்கு 
விண்மீன்களில் சுற்றும் 
ஆன்மாக்களின் ரகசியம்
புரிய வைக்கின்றன பூமியின் மேல் பிறப்பு எடுத்ததின் பொறுப்புகளை. 
 
நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று
நான் புரிந்து கொள்ள முடிகிறது 
இந்த எல்லாவற்றையும்
மேலும் இதுவும் என கனவுகள்
உண்மையை விட அதிகமாக 
அழகாக இருக்கின்றன
மற்றும் அவை பெரும்பாலும் : பெண்களோடு இருக்கின்றன. 
 
இருக்கிறேன் ஆகையாலும் நிச்சயம். 
 
புரிந்து கொள்கிறாள் 
ஏன் ரகசியமாகவே வாழ்கிறாள் பூமி
ஏன் இருக்கிறது பெண்ணைப் போல் பலவந்தமாக
அடிக்கடி என்று அர்ப்பணம் செய்த நஞ்சு கலந்த கொடுமையை
ஏன் அதனுடைய ரத்தம் உறைந்து விடவில்லை உலகின் செய்கைக்கு
ஏன் மீதி மக்களைப் போல தூக்கத்தில். 
தூங்கவில்லை பெண்கள்
அவர்கள் அழுகின்றனர்
மற்றும் இரவின் கடைசி பஹரும்
தூக்கத்தின் சிறு வீதியில்
அவர்களுக்காக தூக்கம் இல்லை
அழுகை இருக்கிறது. 
 
🦀
பஹர் : மூன்று மணி நேரம்
🦀
 
ஹிந்தியில் : சவிதா சிங்
தமிழில் : வசந்ததீபன்
 
🦀
 
 
Series Navigationகூடங்குள ரஷ்ய அணுமின் உலைகள் 3 & 4 கட்டுமான மாகி வருகின்றன.ஊரடங்கு வறுமை