தூங்காத இரவு !

         

 

ஆயிரமாயிரம்

கரிய இழைகளான

கருப்புப் போர்வை

நொடிகள் நிமிடங்களாக

நிமிடங்கள் மணிகளாக நீளும்

காலதேவனின்

வினோத சாலை

இறந்தகால நினைவுகள்

பின்னிப் பின்னி மறையும்

பிரம்மாண்டமான கரும்பலகை

உப்பைத் தின்னும் கஷ்டத்தை

உணர்த்தி ஓடுகின்றன

ஒவ்வொரு கணமும் …

பசியைத் தலையில் தட்டித்

தூங்க வைப்பது எளிதா ?

தூக்கத்தை யாசிக்கும்

ஏழை மனத்தின்

ஏக்க வினாக்கள்

பதிலளிக்கப்படுவதில்லை

தூங்காத இரவில் …

Series Navigationவயதாகிவிட்டதுமுக்கோணக் கிளிகள்