தூசி தட்டுதல்

 

உலக உருண்டையின்

ஏதோ ஒரு பகுதியில்

நடக்கும் அழகிப்போட்டி..

மட்டைப்பந்து போட்டியில்

நெட்டை வீரர் ஒருவரின்

ரெட்டை சதம்..

அரைகுறை ஆடை நடிகையின்

ரகசியதிருமணமும் தொடரும்

விவாகரத்தும்..

தெற்கில் எங்கோ ஒரு

வாய்க்கால் தகராறில்

நிகழ்ந்த குரூரக் கொலை..

நம்ப வைக்க முயற்சிக்கும்

தேர்தல் அறிக்கைகளும்

அது குறித்த

ஆட்சி மாற்றங்களும்..

எத்தனை முறை

வாய் பிளந்து பார்த்தாலும்

திருந்தாத மக்களும்

பயன்படுத்திக்கொள்ளும்

உண்மை மகான்களும்..

 

என எதுவும்

கிடைக்காத அன்று

மீண்டும் தூசி தட்டப்படுவார்

அன்னா ஹசாரேவும் அவரது கொள்கைகளும்..

 

Series Navigationயாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11