தூசு தட்டப் படுகிறது!

படிந்துறைந்த பாசிப் படலத்தின்

பச்சைப் பசேல் பளிங்கு நிறமற்ற
மனதின் பதிவுகளில்
ஆசுவாசப் பட்டுக் கொள்ள முடிகிறதெனினும்..
வழுக்கல்கள் நிறைந்த அனுபவ படிகளில்
அடிக்கடி எச்சரிக்கை எழுப்பும்
பாதங்களின் ஏற்ற இறக்க தொனியில்..
யாரோ ஒருவரின்
இருப்பு – தூசு தட்டப் படுகிறது..!
கரையான் அரித்ததை விட
கவலைகளே துரு பிடித்திருக்கிறது!!!
*மணவை அமீன்*
Series Navigationதாய் மனசுமூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்