ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “முப்பத்தியைந்து வயது கவர்ச்சி ஊட்டுவது. லண்டன் மாநகர் மேற்குடியில் பிறந்த எண்ணற்ற மாதரின் இச்சைக்குரிய வயது ! அவர் யாவரும் 35 வயதாகப் பல்லாண்டு வாழ்ந்து வருபவர் ! மேடம் தும்பிள்டன் அதற்கோர் உதாரணம். எனக்குத் தெரிந்த வரை அவள் நாற்பது வயது அடைந்தது முதல் 35 வயதென்று சொல்லி வருகிறாள் ! அவளுக்கு 40 வயதாகிப் பல்லாண்டுகள் […]
சந்தங்கள் மாறித் துடிக்கும் இருதயம் தினமும் புதிதாய் இங்கே – ஆயிரம் காதை சொல்கிறது பௌதிகம் தாண்டிய திசைகளில்… வெயிலோ பட்டெரிக்கும் வெந்தீ சுட்டு எரிக்கும் வார்த்தை பட்டு உடையும் இதயம் படாத பாடு படும்… யாதும் தொடாமலே எண்ணங்கள் இடமாறலாமா…? நிலவு கந்தளானால் அது உன் பிறை நுதல் என்பேன்., இருள் கந்தளானால் அது உன் விழி வீசும் சுடர் என்பேன்., கனவே கந்தளானால் அதைத் தான் யாது என்க..?, பூவுலகில் துயில் கலைந்தது என்கவா..??! […]
எல்லா ஓவியங்களும் அழகாகவே இருக்கின்றன. வரைந்த தூரிகையின் வலிமையும் பலஹீனமும் நகைப்பும் திகைப்பும் ஓவியமெங்கும் பரவிக் கிடக்கின்றன. பல இடங்களில் தூரிகை தொட்டுச் சென்றிருக்கிறது. சில இடங்களில் தூரிகை துள்ளிக் குதித்திருக்கிறது. சில இடங்களில் தூரிகை எல்லை தாண்டி நடந்திருக்கிறது. இன்னும் சில இடங்களில் தூரிகையின் கண்ணீர் அது விழுந்த இடத்தைச் சுற்றிலும் கரைந்த மேகமாய் மிதந்து நிற்கிறது. தூரிகையின் ஆயிரம் விரல்களின் பேரிசை முழக்கம் விழுந்த ஓவியத்தில் எழுந்து கேட்கிறது. […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நானோர் உண்மை உரைப்பேன் : மனித சிந்தனைகள் கண்ணுக்குத் தெரியும் உலகுக்கு மேலே உயரத்தில் உள்ள ஓர் வாழ்தளத்தில் வீற்றிருப்பவை. அதன் வான மண்டலத்தில் புலன் உணர்ச்சி முகில் எதுவும் தோன்றி மறைப்ப தில்லை. கற்பனை யானது கடவுளின் அரங்கத்துக்குப் பாதை காட்டுவது. ஆங்கே உலோகவியல் உலகிலிருந்து மனித ஆத்மா விடுதலை அடைந்த பிறகு தோன்றும் ஓர் மின்னல் காட்சியைக் காண முடியும். […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஒவ்வொரு வினாடியும் கண்ணாடி முன் நின்று தன்னை வணங்கும் மனிதன் ஆடியின் ஒரு மூலக்கூறைக் கண நேர மாவது கனவு மயக்கத்தில் காண முடிந்தால் அவனது ஊன உடல் வெடிக்கும் ! கற்பனையும் ‘நான்’ எண்ணும் சுய உணர்வும் மாயமாய் மறையும் ! பயின்ற கல்வி அறிவெல்லாம் போயவன் புதுப் பிறவி ஆவான் ! பூரணத் தெளிவுத் தோற்றம் கூறும் அசரீரி: […]
எனது தனிமையின் மௌனம் தற்போது வருகை பு¡¢ந்த உங்களை வெறுப்புக்குள்ளாக்கியிருக்கலாம் வயிற்கதவை தட்டிக்கொண்டிருக்கும் உங்களின் கோபத்தையும் பொருட்படுத்த முடியாமலிருக்கிறேன் வீடு தேடி வந்தும் என் பாராமுகத்தால் அவமானப்படுத்தப்படுகிறீர்கள் என்பதையும் நான் கவனிக்காமல் இல்லை அசைவற்றிருக்கும் நான் பார்வையைக்கூட உங்கள் பக்கம் சுழலவிடாமல் சிலாகித்துக் கொண்டிருக்கிறேன் நீர் கசியும் சவர் குழாயில் நனைந்தும் கண்ணாடியில் முகம் பார்த்தும் தனது பிம்பத்தை கொத்தியபடி என்னையும் சேர்த்து வீட்டில் யாரும் இல்லையென நினத்து விளையாடுகின்றன சிட்டுக்குருவிகள் rathinamurthy
“எங்கும் ஒலிக்கிறது காற்று” என்னும் நோக்குடன் வெளிவந்திருக்கிறது கனடாவிலிருந்து எழுத்தாளர்களான தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் கூர் 2011 கலை இலக்கிய மலர்.’ஒரு மக்களினத்தின் இருப்பு என்பது முதன் முதலாக அதன் பூர்வீகமான நிலம் சார்ந்தது. நிலத்தின் மீதிருந்தே மக்களினமும் மொழியும் கூட கட்டமைவாகின்றன. நிலத்தைத் தேடும் நெஞ்சுகளின் வலியை எப்படி விளக்கிட முடியும்? ஆனால் அத்தேடலின் மூர்த்தண்யத்தை நாம் அடையாளப்படுத்த முடியும். அதன் வீச்சை கோடி காட்ட முடியும். […]
காத்திருப்பு வெகு நேரமாயிற்று விமானம் தரை இறங்கி…… விடைபெற்றுப் போயினர் உடன் பயணித்தவர்கள் யாவரும்; வெறிச்சோடிக் கிடக்கிறது விமான நிலையம்; அடுத்த விமானத்திற்கு இன்னும் அவகாசமிருப்பதால்…… அலைபாயும் கண்களுடன் காத்திருக்கிறார் அழைத்துப் போக யாரும் வராத அவஸ்தைகளை விழிகளில் தேக்கி ஒரு நிகழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மெட்ரிக்குலேசன் பள்ளி மேடையில் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள்! ஆங்கிலத்தில் நாடகங்கள் போட்டார்கள்; ஹிந்தி கிளாசிக்குகளைப் பாடினார்கள்; தமிழில் மட்டும் குத்துப் பாட்டுக்கு ஆடினார்கள் எதுவுமே சகிக்கவில்லை….. ஆனாலும் ரசிக்க முடிந்தது […]
நுழைவதற்குமுன் ஒரு சிறு குறிப்பு: உங்களுக்கிருக்கும் அனேக முக்கிய வேலைகளை ஒத்திவைத்து விட்டு இந்தக் கதையை வாசிக்க புகுந்ததற்கு அனேக வணக்கங்கள்; இன்று அதிகாலை ஏறக்குறைய ஒரே நேரத்தில் உலகத்தின் பல பகுதிகளிலும் நிகழும் சம்பவங்கள் கீழே விவரிக்கப்பற்றிருக்கின்றன. கதை மாந்தர்கள் யாவரும் அவரவரின் தாய் மொழிகளில் தான் உரையாடிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தக் கதையை எழுதுகிறவனுக்கு அவனுடைய தாய் மொழியே தடுமாற்றமென்பதால் அவனுக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் விவரித்துக் கொண்டு போகிறான் என்பதை மட்டும் மனதில் […]
‘‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்“ என்ற பாரதியின் கூற்றிற்கேற்ப மேலைநாட்டு இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர்ந்து வளம் சேர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வ. வே. சு. ஐயர் என்று அழைக்கப்பட்ட வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்காக தீவிரமாகப் போராடினார். சிறந்த தேசபக்தராகவும் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாது வ.வே.சு.ஐயர் சிறந்த இலக்கிய வாதிகவும், மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கினார். இத்தகைய சிறப்புகளை உடைய வ.வே.சு.ஐயர் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி […]