தெல்காப்பியம் கூறும் தன்மைப் பன்மையில் வினையடிகள்

பி.லெனின்
முனைவர்பட்டஆய்வாளர்,
இந்தியமொழிகள் பள்ளி,
தமிழ்ப் பல்கலைக் கழகம்,
தஞ்சாவூர்.

முன்னுரை
தமிழ் மொழி பலவிதமான உள்ளமைப்புகளைக் கொண்டது. ஓலியமைப்பு, ஒலியன் அமைப்பு, இலக்கண அமைப்பு போன்ற உள்ளமைப்புகள் பலவற்றைக் கொண்டது மொழி. ஒருமொழியின் வரலாற்றை ஆராயும் போது அம்;மொழி பல்வேறு பரிணாம வளர்ச்சிநிலையினைப் பெற்று தற்போதைய நிலையினைக் கண்டுள்ளது என்பதனை அறிந்தகொள்ளமுடிகிறது. தென் திராவிட மெழிக்குடும்பத்தைச் சார்ந்தது தமிழ் மொழி. இம்மொழியில் தோன்றியமுதல் இலக்கண நூல் தொல்காப்பியம் என்பதாகும், தொல்கப்பிய சொல்லதிகாரத்தில் தன்மைப் பன்மை வினையில் வினையடிகள் எவ்வாறு பதிவு பெற்றுள்ளது என்பதனை விளக்கும் வகையில் இக்கட்டுரை அமையப்பெறுகின்றது.

திராவிட மொழிகளில் உளப்பாட்டு(inஉடரளiஎந)இ உளப்படுத்தாத்(நஒஉடரளiஎந) தன்மைப் பன்மை என்ற அமைப்பு காணப்பெறுகின்றது, தன்மைப் பன்மை இடப்பெயர்களிலும், வினைமுற்றுகளிலும் காணப்படும் இப்பாகுபாட்டிற்கு சான்றுகள் சங்க இலக்கியங்களிலும், அவற்றை அடுத்து தோன்றிய பிந்தையகால இலக்கியங்களிலும் காணப்படுகின்றன, என்று தொல்காப்பிய உரையாசிரியர்களும், இலக்கண, மொழியியல் அறிஞர்களும் விளக்கம் தருகின்றார்கள். தன்மைப் பன்மையை விளக்குவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் சான்று விளக்கப் பாடல்களில் இடம் பெற்றிருக்கும் வினைச்செற்களின் மூலம் வினையடிகளை இனம் கண்டு விளக்குவதாக இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.

வினையடி
வினையடி என்பது வினைக்குப் பின்னால் கால இடைநிலைகளும், அவற்றிற்குப் பின்னால் ஓரிரு இடங்களில் சாரியையும் விகுதியையும் நீக்கினால் வினையை அல்லது தொழிலை மட்டுமே குறிப்பது வினையடி எனப்படும். ஒரு வினைச்சொல்லின் வேர்ச்சொல்லை மட்டும் காண்பதனை ஒப்பது. அதனில் வினை அல்லது தொழில் இடம் பெற்றிருப்பது வினையடி என்று பொருள்படும்.

தன்மைப் பன்மை
தன்மைப் பன்மை என்பது முன்னிலைப் படர்க்கையை விட மாறுபட்ட அமைப்பாகும். முன்னால் இருப்பவர்கள் அனைவருமே முன்னிலைப் பன்மை; படர்க்கையில் இருப்பவர்கள் அனைவருமே பலர்பால்; அஃறிணையில் இருப்பவர்கள் அனைவருமே பலவின்; பால் என்று கொள்ளப்பெறும். ஆனால், தன்மைப் பன்மை என்பது தன்னோடு முன்னின்றார் அல்லது படர்க்கையாரைச் சேர்த்துச் சொல்லும் போதே உருவாகின்றது. என்று முனைவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தன்மைப் பன்மைக்குச் சிறந்த விளக்கம் அளித்துள்ளார்;. இக்கூற்றின் படி தன்னோடு முன்னின்றார் அனைவரையுமோ, அல்லது படர்க்கையாரைச் சேர்த்து சொல்லும் போதோ தன்மைப் பன்மை வினையானது தோற்றம் பெறுகின்றது என்பதனை இதன் வழி அறிந்துகொள்ளமுடிகின்றது.

தன்மைப் பன்மை உளப்படுத்தலின் வகை
1) முன்னின்றாரை உளப்படுத்தல்
2) படர்க்கையாரை உளப்படுத்தல்
3) அவ்விருவரையும் ஒருங்கே உளப்படுத்தல்
இவைகள் தன்மைப் பன்மையை உளப்படுத்தும் வாயில்களாகவும், அவற்றின் வகைகளாகவும் திகழ்கின்றது.
தொல்காப்பியத்தில் தன்மைப் பன்மை விகுதிகள்
நூற்பா:
அம் ஆம் எம் ஏம் என்னுங் கிளவியும்
உம்மொடு வருவுங் கடதற என்னும்
அந்நாற் கிளவியோடு ஆ யெண் கிளவியும்
பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே
-தொல்-(சொல்-202)
அம் ஆம் என்பன முன்னின்றாரையும் படர்க்கையாரையும் உளப்படுத்தலும், எம் ஏம் என்பன படர்க்கையாரை உளப்படுத்தலும், உம்மொடு வரும் கடதற விகுதிகள் அவ்விருவரையும் ஒருங்கு உளப்படுத்தலும், தனித்து உளப்படத்தலும், என்று இந்நூற்பாவின் வழி எவ்வௌ; விகுதிகள் எவற்றை விளக்க வரும் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இவற்றில் அம் ஆம் கும் தும் றும் என்ற விகுதிகள் தன்மைப் பன்மையில் உளப்படுத்தும் விகுதிகளாகவும், உளப்படுத்தாத் தன்மைப் பன்மை விகுதிகளாகவும் வரும் என்பதனையும். ஆனால் எம் ஏம் என்ற விகுதிகள் உளப்படுத்தாத் தன்மைப் பன்மை விகுதிகளாக மட்டுமே வரும் என்பதற்கு சங்க இலக்கியங்களிலும், பிந்தைய காலக்கட்டங்களில் எழுதப்பட்ட இலக்கியங்களிலும் சான்றுகள் காணக்கிடைக்கின்றன.

தன்மைப் பன்மை அம் விகுதியில் வினையடி
புகுக நாம்….(ஐங்.396;:5)
கேட்டன நாம்….(அகம்.216:14)
மேற்கண்ட சான்றுகளில் வினைச்சொற்கள் தன்மைப் பன்மையை விளக்குவதாக அமைந்துள்ளது. இவைகள் உளப்பாட்டுப் பொருளில் பலர் பால் உணர்த்தி நிற்கின்றது.
நாம் ஸ்ரீ தன்மைப் பன்மை விகுதி
புகு, கேட்ட ஸ்ரீ வினையடி
வினையடியாக இடம் பெற்று ஈற்றில் விகுதிக்கு ஏற்ப பன்மைப் பொருளில் இச்செய்யுளில் பொருள் வடிவம் தருவதாகவும் உளப்பாட்டுப் பொருளிலலும் தன்மைப் பன்மை வினை இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.
தன்மைப் பன்மை ஆம் விகுதியில் வினையடி
செய்வாம்….(நற்.194;:2)
ஆம் விகுதியில் செய்வாம் என்பது தனமைப் பன்மை விளக்கும் வினைச்சொல்லாகும். இவ்வினைச்சொல் உளப்பாட்டுப் பொருளில் அமைந்துள்ளது இதில் வினையடி கட்டளை வாக்கியத்தில் அமைந்துள்ளது.
ஆம் ஸ்ரீ தன்மைப் பன்மை விகுதி
செய் ஸ்ரீ வினையடி
இவ்வினைச்சொல் பால் உணர்த்தும்போது பலர் பால் உணர்த்தும் பொது வினைச்சொல்லாக இடம் பெற்றுள்ளது.

உளப்படுத்தாத் தன்மைப் பன்மையில் வினையடி
சேறுகம்…. (பதிற் 49:1)
வந்தனம்….(புறம். 10:13)
இவைகள் உளப்படுத்தாப் பொருளில் வந்துள்ள தன்மைப் பன்மை வினைச்சொல்லாகும். இவ்வினைச்சொல்லும் பொது வினையாகவே பதிவு பெற்றுள்ளது.
அம் ஸ்ரீ தன்மைப் பன்மை விகுதி
சேறு, வந்த ஸ்ரீ வினையடி
இவைகள் தன்மைப் பன்மை அம் விகுதியில் உளப்படுத்தாப் பொருளில் வந்த வினைச்சொற்களாகும்.

அகல்வாம்….(நற்.103:9-10)
செய்வாம்….(குறுந்.217:5)
மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகள் ஆம் விகுதியில் தன்மைப் பன்மை வினையானது உளப்படுத்தாப் பொருளில் வந்துள்ளதனைக் குறிக்;கின்றது.
ஆம் ஸ்ரீ தன்மைப் பன்மை விகுதி
அகல். செய் ஸ்ரீ வினையடி

எம் ஏம் தன்மைப் பன்மை விகுதிகளில் வினையடி
எம் ஏம் இவ்விரண்டு விகுகளும் பெரும்பான்மையான இலக்கியச் சான்றுகளில் உளப்படுத்தாத் தன்மைப் பன்மை பொருளையே உணர்த்தி நிற்கின்றன.
எம்-
என்குவெம்….(குறுந்.191:7)
கொண்டனெம்….(ஐங்.69:11)
வேண்டினெம்…..(புறம்.140:5)

ஏம்
செல்வேம்….(ஐங்.429:2)
வாழ்தினேம்….(பரி.13:62-63)
இவ்விரண்டு விகுதிகளும் உளப்படுத்தாத் தன்மைப் பன்மைக்கு மேற்கண்ட சான்றுகள் மிகுந்த பொறுத்தமானதாக அமையப்பெற்றுள்ளதனைக் காணமுடிகின்றது.
எம் ஏம்; ஸ்ரீ உளப்படுத்தாத் தன்மைப் பன்மை விகுதி
என்கு
கொண்ட
வேண்டி
செல்
வாழ் ஸ்ரீ வினையடி
தன்மைப் பன்மையில் வினைமுற்றுகளாக இச்சொற்கள இடம் பெற்றுள்ளமையையும், அவைகள் உளப்படுத்தாத் தன்மைப் பன்மை வினைமுற்றுகளில் இருந்து வினையடிகள் தருவிக்கப்பட்டிருப்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இச்சான்றுகள் வழி பழந்தமிழ் இலக்கியங்களில் தன்மைப் பன்மை வினைகள் எவ்வாறு பயின்று வந்துள்ளது என்பதனையும் அறிய முடிகின்றது.

தன்மைப் பன்மை கும் டும் தும் றும் விகுதிகளில் வினையடி
தொல்காப்பியர் கூறியுள்ள தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகளில் கும் டும் தும் றும் என்ற விகுதிகள் உளப்பாட்டு, உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என இரண்டு பொருளிலும் வரும்.
காண்கும் ஸ்ரீ கும்
காண்டும் ஸ்ரீ டும்
அறிந்தும் ஸ்ரீ தும்
சேறும் ஸ்ரீ றும்
இவ்வினைமுற்;றுகள் உளப்பாட்டுப் பொருளில் தன்மைப் பன்மை வினை விகுதிகளாக இதில் வினையடிகளாக கீழ் காணப்படும் பகுதிகள் அமைந்துள்ளது.
காண்
ஆறி
சேறும்
இவைகள் தன்னோடு முன்னின்றாரையும், படர்க்கையாரையும் உளப்படுத்தும் வினையடிகளாக இங்கு இடம்பெற்றுள்ளது.
முடிவு
பழந்தமிழில் உளப்பாட்டுப் பொருளில் வரும் ஒருசில வினைச்சொற்களையும், உளப்படுத்தாப் பொருளில் வரும் சில வினைச்சொற்களையும், வினைமுற்றுகளில் தன்மைப் பன்மை வினையில் வினையடிகள் எவ்வாறு பயின்று வந்துள்ளது என்பதனையம் அறிந்து கொள்ளமுடிகின்றது. தொல்காப்பியர் அச்சொற்கள் எவ்வெப் பொருளில் வரும் என்பதனையும் மூன்று இடங்களிலும் தன்மைப் பன்மை வினையானது எவ்வாறு வரும் என்பதனை அறிந்து அதந்கு இலக்கணம் வடித்துள்ளார் என்பதனையும் மேலும் வினையடி என்பது தொழில் மற்றும் வினையினை உணர்த்தினாலும் வினையடிகள் பெரும்பாலும் கட்டளை வாக்கியமாகவும் பொது வினையாகவும் இருப்பதனையும் அறிந்து கொள்ளமுடிகின்றது.

பார்வை நூல்கள்
1) தொல்காப்பியம் சொல்லதிகாரம், இளம்பூரணர் உரை, கழக வெளியீடு.
2) சொல்லியல ஆய்வுகள்;, முனைவர் சுபாஷ்சந்திரபோஸ், மணிவாசகர் பதிப்பகம்.
3) சொல்லிலக்கணக் கோட்பாடு, முனைவர் செ.வை.சண்முகம்.
4) செம்மொழி நோக்கில் தொல்காப்பியச் சிந்தனைகள், தொல் இளமுருகு பதிப்பகம்.
5) இலக்கண உலகில் புதிய பார்வை, முனைவர் பொற்கோ.

Series Navigationவருவேன் பிறகு!ஜரகண்டி