தேடாத தருணங்களில்

சித்ரா
—————

கூழாங் கற்களை
தேடிப் பழகிய கைகள்
வெறுங்கையாகவே
குவிந்து மூடிக்கொண்டன
ஒர் தீர்மானத்துடன்..

தேடுவதை ஏன்
நிறுத்திவிட்டாய் என
மெல்ல தட்டிக் கேட்கிறேன்

விரல்களை இதழ்களாக
விரித்துக் காண்ப்பிக்கிறது
தேடாத தருணங்களில்
மட்டுமே உருவாகும் சுயமான
ஒளிக் கற்களை

– சித்ரா
(k_chithra@yahoo.com)

Series Navigationஎருமைப் பத்துசில நிறுத்தங்கள்