தொடுவானுக்கு அப்பால்

Spread the love

சி. ஜெயபாரதன், கனடா

தொடுவானுக்கு அப்பால் சென்றால் 
தொப்பென வீழ்வோ மெனச்
சொப்பனம் கண்டோம்!
செல்லாதே என்று
சிவப்புக் கொடி காட்டும்
செங்கதிரோன்!
தங்கப் பேராசை கொண்டு
இந்தியாவுக்கு
புதிய கடல் மார்க்கம் தேடி
அஞ்சாமல் சென்றார்
கொலம்பஸ்!
புத்துலகு, பொன்னுலகு
வட அமெரிக்கா கண்டுபிடிக்க
வழி வகுத்தார்!


தொடுவானம் தாண்டிப் பயணித்து
துவங்கிய இடம் வந்தோம் !
உலகம் தட்டை இல்லை
உருண்டை எனக் கண்டோம் !
அச்ச மின்றி, அயர்வு மின்றி
உச்சி மீது வான் இடிந்தும்
முன் வைத்த காலைப்
பின்வாங்காது,
முன்னேறு வதுதான்
முதிர்ச் சிக்கு  அறிகுறி !
புதிய பூமி கண்டு பிடிக்க
மனித இனத்துக்கு
துணிவு விதி!

Series Navigationபாரதி தரிசனம் பிறமொழிகளில் பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் !எனது ஆகாயம்