தொந்தரவு

 

தன் வண்டியைப் பல

தளங்கள் தாண்டி

நிறுத்தத் தெரியாது

 

விலைப் பட்டையைப்

பார்க்காமல் தேர்வு

செய்ய மாட்டார்

 

விற்கும் உணவுகளில்

எதுவும் அவரால்

ஜீரணிக்க முடியாது

 

தான் செல்ல வேண்டிய

தளத்துக்கான வழியைக்

கேட்டு இளவயதினரின்

இனிய பொழுதைக் கெடுப்பார்

 

எழுதாத விதியாக

ராட்சத வணிக வளாகத்தில்

இல்லை

ஒரு முதியவருக்கு இடம்

 

பெரு நகரின்

வழி முறைகளில்

பொருந்தாத மற்றொரு

தொந்தரவு

மழை

 

நகரம் கோரும் நீர்

தொலைவுக் கிராமத்தில்

இருந்து உறிஞ்சப் பட்டு

வந்து விடும்

 

மழையை வெறுக்கும்

உரிமை நகருக்கு உண்டு

 

மனித உரிமைகள் தவிர்த்த

பல உரிமைகள் போல

Series Navigationகிளிதாய்த்தமிழ்ப் பள்ளி