தொலைந்து போன சிரிப்புகள்

Spread the love

  • ஒருபாகன்

பருவமெய்தினேன்

வாழ்க்கை லேசாகப் புலப்பட்டது

ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின?

சக்கரத்தில் எலியானேன்

வாழ்க்கை லேசாகக் கேட்டது

ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின?

மோகம் முப்பதையும் ஆசை அறுபதையும் கடந்தேன்

வாழ்க்கை லேசாக மணத்தது

ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின?

இளநரை கொண்டேன்

வாழ்க்கை லேசாக சுவைத்தது

ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின?

முதிர் கொண்டு முயங்கினேன்

வாழ்க்கை உணர வைத்தது

சிரிப்பும், தவிப்பும், அனைத்தும் மாயையே !

  • ஒருபாகன்
Series Navigationமெல்லச் சிரித்தாள்சலனமின்றி அப்படியே….