நகை முரண்

 

ஊழலை ஒழிக்க

விழைகிறவர் எப்போதும்

அதிகாரத்தில் இல்லாதோர்

 

பெண்ணுரிமை பேசுவோர்

அனேகமாய் ஆண்கள்

 

கல்விச் சீர்திருத்தம்

யார் வேண்டுமானாலும் பேசுவர்

மாணவர் தவிர

 

நதிநீர் பங்கு கேட்டுப்

போராடும் யாரும் கேட்பதில்லை

நதிநீர்த் தூய்மை

 

அணு மின்சார அனல் மின்சார

எதிர்ப்பாளர் வீட்டில் இல்லை

சூரிய மின்சாரம்

 

வாசிப்புக் குறைந்தது

கவலை தருகிறது

எழுத்தாளருக்கு மட்டும்

 

ஒரே கூரையின் கீழ்

செய்தி பரிமாறுவர் ஒருவருக்கொருவர்

உலகின் மூலையிலுள்ள ஒரு

கணினி மூலம்

 

(இந்த கவிதையை கம்ப்யூட்டர் படிப்பதை கேட்க இந்த இணைப்பை சொடுக்கவும். இது ஒரு சோதனை முயற்சி. படிக்க சிரமப்படும் பார்வை குறைந்தவர்களுக்கான முயற்சி)

)

Series Navigationசாவடி – காட்சிகள் 10-12“சாலிடரி ரீப்பர்”…வில்லியம் வோர்ட்ஸ்வர்த்