“நடிகர் சிகரம் விக்ரம்”

எவ‌ரெஸ்ட் சிக‌ர‌ம்
இவ‌ர் ந‌டிப்பின்
விய‌ப்பில்
வ‌ழிவிட்டு ஒதுங்கிக்கொண்ட‌து.
விருதுக‌ளின் முக‌ங்க‌ள்
அச‌டு வ‌ழிந்த‌ன‌.
இவ‌ருக்கு விருது த‌ர‌
என்ன‌ இருக்கிற‌து இங்கு?

ஆங்கில‌ப்ப‌ட‌ம் த‌ழுவிய‌போதும்
இந்திப்ப‌ட‌மும் (“பார்”)
வ‌ந்து விட்ட‌ போதும்
அமிதாப் அங்கு சிற‌ப்பாக‌
அச‌த்திய‌ போதும்
எல்லாருமே
அண்ணாந்து பார்க்க‌ வைத்துவிட்டார்
விக்ர‌ம்.

தலைப்பின் சலசலப்பு
சந்திக்கு வரும் முன்
பந்தி விரித்துவிட்டார்கள்
தெய்வத்திருமகள் என்று!
தெய்வத்திருமகனா? தெய்வத்திருமகளா?
நடிப்பின் சுவையான பட்டிமன்றம் இது.

ம‌ழ‌லைக்குள் புகுந்து
ந‌ம் க‌ண்ணுக்குள்
ம‌ழைபெய்ய‌ வைத்து விட்டார்
விக்ர‌ம்..

புதிய‌ புதிய‌
ப‌ரிமாண‌ங்க‌ளுக்குள் எல்லாம்
பரிணாமம் செய்யும்
இவ‌ர‌து
ந‌டிப்பின் தாகம்
மசாலா வாசனை பிடிக்கும்
மற்ற‌ டாஸ்மாக் ஈச‌ல்க‌ளுக்கும்
க‌ட் அவுட்டுக‌ளில் சொரியும்
அந்த‌ பால்குட‌ங்க‌ளுக்கும்
புரியாது தான்.

திரையின் பொய்யை
த‌ரையின் மெய்யாய்
நின‌ந்து
மேய்ச்ச‌ல் புரியும்
ம‌ந்தைக‌ளின் ச‌ந்தைக‌ளால்
க‌றை ப‌ட்டு போகாத‌
ந‌டிப்பின் ர‌த்தின‌ம்
விக்ர‌ம்.

அந்த‌க்குழ‌ந்தை
தாராவின்
இன்னொரு குழ‌ந்தையாய்
விக்ர‌ம்
விய‌க்க‌ வைக்கிறார்.
ந‌டிப்பிற்கு
ஒரு “பிள்ளைத்த‌மிழ்” பாடியிருக்கிறார்.

முற்றிய
முர‌ட்டு உட‌ம்புக்குள்
ஒரு வெள்ளை ம‌ன‌த்தின்
வெள்ள‌ரிப்பிஞ்சை த‌ந்து ந‌ம்மை
புல்ல‌ரிக்க‌ வைக்கிறார்.

உட‌ம்பிய‌ல் அணுக்க‌ள்
இவ‌ரிட‌ம்
ஒரு அம்மா அப்பா விளையாட்டை
அர‌ங்கேற்றிய‌போதும்
இவ‌ருக்கு அது
ஒரு விவ‌ர‌ம் புரியாத‌ விப‌த்து தான்.
இவ‌ருக்கு
குழ‌ந்தை பிற‌த்தது கூட‌
ஏதோ ஒரு செடியில்
வைர‌மே
காயாக‌ பிஞ்சு விட்ட‌ ம‌கிழ்ச்சிதான்.
உற்சாகத்தின்
அந்த‌ மின்ன‌ல் வெள்ள‌த்தை
உடைத்து பிர‌வாக‌ம் செய்வ‌தில்
ந‌டிப்பின் பிர‌ப‌ஞ்ச‌ விளிம்புக்கே
போய்விட்டார்.
குழ‌ந்தையோ இவ‌ரிட‌ம்
விளையாடிய‌து
அற்புத‌மான‌
அம்மா ‍‍ம‌க‌ன் விளையாட்டு.

இந்த‌ப்ப‌ட‌த்துக்குள்
இன்னொரு விக்ர‌ம் ஒளிந்திருகிறார்.
டைர‌க்ட‌ர் விஜ‌ய் தான் அவ‌ர்.
இந்த‌ வாலிப‌ ப‌ருவ‌ விக்ர‌மையும்
குழ‌ந்தைப்ப‌ருவ‌ விக்ர‌மையும்
“ட‌பிள் ஆக்ட்”விக்ர‌ம்க‌ளாக‌
வ‌ல‌ம் வ‌ர‌ச்செய்திருக்கும் அவ‌ர‌து
வ‌ல்ல‌மையை
எவ்வ‌ள‌வு போற்றினாலும் த‌கும்.
குழ‌ந்தை தாராவின்
மிக‌ உய‌ரிய‌ ந‌டிப்பு
ந‌ம்மை மெய்சிலிர்க்க‌ வைக்கிற‌து.

அந்த‌ கோர்ட் ம‌ற்றும்
மாமூல் காட்சிக‌ளுக்காக‌
ஆனந்த‌ விக‌ட‌ன்
அந்த‌ இன்னொரு ஐம்ப‌து மார்க்கை
குறைத்து விட்ட‌போதும்
விக்ர‌மின்
ந‌டிப்பில் தெறித்த‌
ந‌ர‌ம்பின் ஒவ்வொரு நியூரான்க‌ளுக்கும்
நூற்றுக்கு நூறு
கொடுத்தே ஆக‌வேண்டும்.

ஆம்.
ச‌ந்தேக‌மில்லை.
விக்ர‌மின் ஒவ்வொரு
ந‌டிப்பின் திருப்ப‌ங்க‌ளில்
ஆன‌ந்த‌ விக‌ட‌னும்
விமரிசனங்கள் மூலம்
த‌ன்னை
புட‌ம் போட்டுக்கொள்கிற‌து.

=====ருத்ரா
24/7/2011

Series Navigationபாகிஸ்தான் சிறுகதைகள்வாரக் கடைசி.