நமக்கான எதுவும் நம்மிடம் இல்லை

This entry is part 7 of 9 in the series 2 ஜூன் 2019

மஞ்சுளா

முற்றிலும் இழந்து விட்ட நேரங்களால் நிரம்பியுள்ளது இவ்வுலகம் மூடப்பட்ட இவ்வுலகத்திலிருந்தே திறக்கின்றன நமக்கான கதவுகள் திறக்கப்படும் ஒலியை அறியும் செவிகள் நுட்பமானவை நுட்பத்திலும் வெகு நுட்பமான திறனுடன் அறியப்பட்ட வெவ்வேறு வடிவங்களில் நிரப்பப்பட்ட கலன்களில் ஊறிக்கொண்டிருக்கின்றன நம் சுவைகள் சுவையூரிகளிடமிருந்து பிடுங்கப்பட்ட வாழ்க்கை நவீன உத்திகள் பொதிந்த விளம்பரங்களால் வளர்ந்து கொண்டே போகின்றன சிதைவுகளின் கோர உருவத்தை மறைத்து விளம்பரங்களையே நுகரும் மக்களால் வாழும் இவ்வுலகத்தில் உற்பத்தி செய்யப்படலாம் எதுவும் முற்றிலும் இழந்து விட்ட நமக்கான நேரங்களைத் தவிர.                

மஞ்சுளா                 மதுரை             

Series Navigationஎன்னவளேதிருப்பூர் சக்தி விருதுகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *