நாக்குள் உறையும் தீ

பத்மநாபபுரம் அரவிந்தன்
padmaarav
சில நாக்குகள் கனலை
சுமந்து திரிகின்றன

சில நாக்குகள் சதா
ஜுவாலையை உமிழ்கின்றன

சில நாக்குகள் கனல்
சுமக்க எத்தனிக்கின்றன

சில நாக்குகள் பிற நாக்குகளின்
கனலை ஊதி நெருப்பாக்குகின்றன

சில நாக்குகள் கனலை
அணைப்பதாய் எண்ணி
தவறிப் போய்
பெரும் நெருப்பை வருத்துகின்றன..

சில நாக்குகள் தீயை
உமிழ முடியாமல் விழுங்கி
தம்மையே எரித்துக் கொள்கின்றன

மொத்தத்தில் எல்லா நாக்குகளிலும்
உறைந்து கிடக்கின்றது தீ …
—————————-

Series Navigationகுப்பிகண்டெடுத்த மோதிரம்