‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’

Spread the love

கடற்கரையில ஒரு இலக்கிய உரையாடலின்போது, ‘புதிய அலைகள்’ என்று இலக்கியத்தில் இப்பொழுது ஒரு சொல் அடிபடுவது பற்றி சர்ச்சை எழுந்தது ‘அலைகளில் புதிசு உண்டா?’ என்று கேட்டேன் நான். ‘’அலைகளில் ஏது புதிது, கரைகள் வேண்டுமானால் புதிது புதிதாகத் தோன்றலாம்” என்றார் நண்பர். .அலையா, கரையா? என்ற சர்ச்சையை ஒதுக்கிவிட்டு, பொதுவாக இன்று பெரிய பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் கதைகளைப் பார்த்தோமானால் இலக்கியத் தரம் என்ற ரசமட்டத்தில் துல்லியமாக அடங்குவது மிக அரிது.

ஆனால் இன்று சிறுகதைகளில் ஒரு சோதனைக் காலம் அரும்பி தலைதூக்கி நிற்கிறது. என்பது மட்டும் உண்மை. எனினும் இன்று சிறுகதை உலகம் சற்றே பரபரப்பு உடையதாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தின் அத்தனை பிரதிபலிப்பையும் கண்ணாடியாகத் துலக்கும் கதை இலக்கியம் இனிமேல்தான் பிறக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன்.

வரப்போகிற அந்த நல்ல காலத்தை நினைவிலிருத்திக் கொண்டு ‘மோக பல்லவி’ மூலம் என் பத்தாண்டு காலச் சிறுகதைகள் சிலவற்றை வாசகர் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஆ.மாதவன்
திருவனந்தபுரம்.
19-6-1975.

Series Navigationசரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29மெய்கண்டார்