நாவல் பயிற்சிப் பட்டறை

Spread the love

 

 

 

கவிதை, சிறுகதை பயிற்சிப் பட்டறைகளையடுத்து  இந்த நாவல் பயிற்சிப் பட்டறை  நாவல் எழுதும் முயற்சிக்கு அடிப்படைகள், நாவல் அனுபவங்கள் பற்றியது –திருப்பூரில் நடைபெற்றது .

0

 09/10/22 ஞாயிறு காலை 10 மணி முதல்

மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை, திருப்பூரில் நடைபெற்றது. தலைமை: சி. சுப்ரமணியம் ( நிறுவனத்தலைவர், மக்கள் மாமன்றம்).. முன்னிலை: க.தங்கவேல்,  சத்ருக்கன், ராஜா மற்றும்          மக்கள் மாமன்ற நிர்வாகிகள்

 0

 

. தமிழ் நாவல் சார்ந்து முதல் தமிழ் நாவல் பற்றிய கருத்துக்கள், வெவ்வேறு வகையான தமிழ் நாவலின் வடிவங்கள் தேசிய போராட்டம்.அதன் பாதிப்பான நாவல்கள்..திராவிட இயக்க பாதிப்பு நாவல்கள் ..மார்க்சீய பாதிப்பு வெளிப்பாடுகள், பின்நவீனத்துவ வகைகள் என்று நாவல் சார்ந்த வடிவ உத்திகள் மற்றும் மையங்கள் சார்ந்து என்னுடைய அபிப்பிராயங்களை பகிர்ந்து கொண்டேன்  (சுப்ரபாரதிமணியன்)

0

.மக்கள் மன்ற நூலகர் வின்சென்ட் ராஜ், தொ.மு.சிரகுநாதன் அவர்களின் பஞ்சும் பசியும் நாவல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அதன் கதை அம்சங்கள். அதில் உள்ள நெசவாளர்களுடைய நிலைமை அவர்களுடைய போராட்டத்தன்மை போன்றவற்றை விளக்கினார் .இன்றைய எதார்த்த வகை நாவல்களில் முன்னோடியாக அந்த நாவல் எப்படி இருந்தது என்பதை பற்றி ரசனை அடிப்படையில் அவருடைய உரை அமைந்திருந்தது.

தொ மு சி ரகுநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் சமயத்தில் அவரை நினைவு கூர்ந்து அவரின் நாவலை பற்றி அவர் விரிவாக பேசுகிறது இன்றைய நாவல் பட்டறையில் சிறப்பம்சமாக இருந்தது

0

வட்டார மொழியும் வட்டார அனுபவங்களும் இல்லாத நாவல் தமிழ்படைப்புலகத்தில் சிறப்பு சேர்க்காது. வட்டார நாவல்கள் என்பவை தமிழுக்கு கிரீடமாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் என் படைப்புகள் வட்டாரமொழியை உள்ளீடாக கொண்டு விளிம்பு நிலை மக்கள்வாழ்க்கையை சொல்லும் படைப்புகளாக அமைந்திருக்கின்றன .அந்த வகையில் தான் என்னுடைய சிறு கதைகளை தாண்டி முதல் நாவல் அனுபவம் அமைந்திருக்கிறது என்று அழகு பாண்டி அரசன் குறிப்பிட்டார்.

0

.அனுபவ பகிர்வு நடைபெற்றது முத்து பாரதி அவர்கள் துப்புரவு என்ற அவரின் முதல் நாவலில் துப்புரவு தொழிலாளர்கள் வாழ்க்கையும் தலித் மக்களின் வாழ்க்கையையும் விவரித்து இருப்பதை சொன்னார்.அவரின் அடுத்த வாரம் வெளியாகும் அகதி நாவலில் இலங்கை அகதிகளின் வேதனைகளைகச் சொல்லியிருப்பதை குறிப்பிட்டார். வெவ்வேறு வகையான நாவல் வடிவங்களில் அவர் முயற்சித்து வருவதை அவரின் பேச்சு வெளிப்படுத்தியது .அழகு பாண்டி அரசப்பனின் ௨ரையில் அவர் வாழைத்தோட்டத்துத் தொழிலாளர்களை மையமாக வைத்து எண்பதுகளின் நடந்த மாற்றங்களை விரிவாக்கி எழுதி முடித்திருக்கும் புதிய நாவல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் .பொன் சண்முக சுந்தரம் கல்வித்துறையில் இன்று நடக்கும் சீர்கேடுகள்..மாணவருடைய போக்குகள் கொரோனா காலத்திலும் பின்னாலும் கல்வியின் தரம் குறித்த தன்னுடைய வேதனைகளை வெளிப்படுத்தி எழுதி வரும் புதிய நாவல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். சாமக் கோடாங்கி ரவி யதார்த்த வாதம் மற்றும் பின்நவீனத்துவ நாவல் வடிவங்கள் போன்றவை ஜி நாகராஜன் முதல் ப சிங்காகரம் உட்பட பலரின் நாவல்களை மேற்கோள்காட்டி பேசினார் .சிறப்பான அனுபவ பகிர்வுகளாக அமைந்தது நாவல் பட்டறை

0

 

 தளிர் பதிப்பக முயற்சியின் வடிவங்களாக வெவ்வேறு ஊர்களுக்கு திருப்பூர் படைப்பாளிகளின் நூல்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லும் ரத்தினமூர்த்தி அவர்களின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.அவரின் ஆவரங்காடு .தாக நதி..குமரன் சாலை ஆகிய மூன்று நாவல்கள் பற்றிய அனுபவங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார். நகரமாய் மாறும் கிராம ங்கள்..நம் கலாச்சார அனுபவங்கள் மறைந்து கொண்டிருப்பது போன்றவற்றினுடைய விசனத்தை அவருடைய நாவல்கள் தெரிவிக்கின்றன என்றார்

0

நாவல் பட்டறை. யதார்த்த வாதம்., பின் நவீனத்துவம் இன்றைய சமூக வியலை எடுத்து ரைக்கும் படைப்பு வடிவங்களாக இருப்பதை விளக்கி சாமக்கோடாங்கி ரவி ௨ரை..ப.சிங்காரம்..முதல் ஜி. நாகராஜன் வரை என்று குறிப்பிட்டார்.

தமிழ் நாவல் முயற்சிகள் பற்றிய பல்வேறு கோணங்கள் அலசப்பட்டன.

 

Series Navigationஇரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வுஜீசஸ் ஹாண்டில் – சிறுகதை