நிகழ்வு

Spread the love

வெளி
அனைத்தையும்
உள்ளடக்கி இருக்கிறது
உள்ளக்கிடக்கையை
முகிலாகித் தணித்தது
கூண்டுப் பறவை
இறக்கையைக்
கோதிக் கொள்ளும்
வான விதானத்தைப்
பார்த்தபடி
கருடன் நிழலைக் கண்டு
அஞ்சும் கோழிக் குஞ்சுகள்
பரிதி முளைக்கும் வானம்
தங்க நிறத்தில் மின்னும்
ஒரு மிடறு நீர்
உள்ளே சென்றவுடன்
உடல் ஆசுவாசம் கொள்ளும்
மழையின் ரூபம்
விழும் இடத்தைப் பொறுத்து
மாறும்
ருசி கண்ட பூனை
நடுநிசியில் பாத்திரத்தை
உருட்டும்.

Series Navigationஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லைஉதிரும் சிறகு