நினைவுகளின் மறுபக்கம்

நிலாவையே நினைத்துக்

கொண்டிருந்தேன்.

நிமிடங்கள் பறந்து

போயிற்று.

 

குளிர்ச்சியாய் மனது

குதூகலாமாயிற்று.

 

என்னைப் போல் அங்கும்

நிலாவிலிருந்து யாரோ

பூமியை நினைத்துக்

கொண்டிருக்கலாம்.

 

பூமியின் வெப்பம்

அவர்களின் மனதை

வியர்க்க வைக்கலாம்.

மறைந்த பசுமை

அவர்களின் மனதை

உறைய வைக்கலாம்.

சுற்றும் பூமியின்

சிமென்ட் சிரங்குகள்

அவர்களின் மனதினை

அருவருக்க வைக்கலாம்.

 

மழைவராத பேரிடியும்

இரைச்சலும் மனதை

நெருட வைக்கலாம்.

 

இப்போதும் நிலாவை

நினைத்துக் கொண்டிருந்தேன்.

அங்கே பூமியை நினைத்துக்

கொண்டிருப்பவராய்

நானும் என்னை

நினைத்துக்

கொண்டிருந்தேன்.

நிலவு சூரியனாய்

என்னை தகதகக்க

வைத்தது.

 

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)மிக பெரிய ஜனநாயக திட்டம்?!!! ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்!