நிமித்தங்கள்

Spread the love

 

 

லாவண்யா சத்யநாதன்

இந்த மண்ணை நான் நேசிக்கிறேன்.

இந்த மண்ணின் மக்களை நான் நேசிக்கிறேன்.

மதம், குலம், நிறம், மொழி,, திசையென

மனத்தடைகள் விலக்கி

இந்த தேசத்தின் கடைமுகமான மக்களை நான் நேசிக்கிறேன்.

அவர்கள் என் அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள்.

அடுத்த வேளை உணவு அநிச்சயமானவர்கள்.

மக்கள் திரளில் அதிகமானவர்கள்.

பேராசைக்காரர்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள்.

சுதந்திரத்தின் வெளிச்சம் படாதவர்கள்.

விநாயகர் ஊர்வலமும் விண்வெளி விஞ்ஞானமும்

விடுதலைக்குதவாதென்று புரிந்து கொள்கிறார்கள்.

அவர்கள் பேசும் சொல்லில் பெருமூச்சில்

கடுங்கோபத்தில் தீப்பொறிகள் பறக்கின்றன.

சுதந்திரப்போர் இரண்டின் நிமித்தங்கள் தெரிகின்றன.

இந்த தேசத்தின் கடைமுகமான மக்களை நான் நேசிக்கிறேன்.

நான் அவர்களின் குரலாயிருக்க விரும்புகிறேன்.

 

—லாவண்யா சத்யநாதன்

Series Navigationகைப்பேசிக்குள் நிகழ்ந்த கவர்ச்சி நடனம்.பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது