காலை மணி எட்டரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கேன் நெற்றியில் வேர்வை வழிய வழிய. பவர் கட்டுத் தொல்லை வேறு ! அது எப்போது வருமோ ? இன்னும் வீட்டு வேலை செய்ய வரும் ஆயிஷா… வரவில்லை.எத்தனை நேரம் தான் நேற்று ராத்திரி போட்ட பத்துப் பாத்திரங்கள் காய்ந்து கொண்டிருக்கணும் ?
வேலைக்கு வந்து பத்து நாட்கள் கூட ஆகலை…அதற்குள் இப்படி….! இந்த லட்சணத்துக்குத் தான் நான் வேலைக்கு ஆளே.. வெச்சுக்காமல் இருந்தேன்…என்னோட இந்த விரதத்துல போன வாரம் ஆயிஷா தான் கையை வைத்தாள்.. எப்படின்னு கேட்கறேளா…? இருங்கோ…இந்தப் பாத்திரதத் தேச்சுண்டே சொல்றேன்…..கதை கேட்க உங்களுக்கு இஷ்டமோ இல்லையோ…இந்த உண்மை நிகழ்ச்சியைச் சொல்லித்தான் தீரணும்….! அதோட இல்லாமல் இதக் கேட்டு…என் மேல் அல்லது எதிர்வீட்டு அம்மா மீது ஒருவர் கல்லை வீசலாம் ! அல்லது எங்கோ ஒரு மூலையில் ஒரு மனம் மாறினாலும்….நல்லது தான்.
பத்து நாட்கள் முன்னாடி….தான் முன்னப் பின்ன தெரியாத அவளை பக்கத்து பிளாக் இல் இருக்கும் பர்வீன் பேகம்….அறிமுகப் படுத்தி வைத்தாள்.. இவளுக்கு குடும்பத்தில் ரொம்ப கஷ்டம்….கணவன் பிள்ளையுடன் இவளை விட்டு ஒட்டி விட்டான். நீங்க வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டு ஒரு ஐநூறு அறுநூறு கொடுத்தால்….ஒரு குடும்பம் பிழைக்கும். அவள் நிறுத்த…
ஆயிஷா… தொடர்ந்தாள்.
” இல்லம்மா…நான் ரொம்பக் கஷ்டப் படறேன்மா….இரண்டு பிள்ளைங்க…..படிக்க வைக்கணும்….புருஷன் சரியில்லை….பத்து நாளைக்கு ஒரு தபா தான் வீட்டுப் பக்கமே வந்தாலும் வருவாரு….இருக்கியா…செத்தி
“ஏன்மா….நான் முஸ்லிம்னு பார்கறீங்களா..? நீங்க….ஏன்னா ஆளுங்க…..? என்று கேட்க…
ச்சே…ச்சே…அப்படி எல்லாம் பார்க்கலை….என்று வாயும்…..வேண்டாம்னா….இப்
சரி…நாளையில் இருந்து வா….கார்த்தால ஏழு மணிக்கெல்லாம் வந்துடு…என்ன சம்பளம் வேணும் என்று கேட்டதும்….
பாத்திரம் தேய்ச்சு…மெஷின்ல தானே துணி துவைப்பீங்க….அதைக் மாடியில் காயப் போட்டு, வீட்டைப் பெருக்கி துடைத்து…வைக்கணுமா ?.
சரி…..என்று சொன்னதும்….முகத்தில் ஒரு நிம்மதி. சரிம்மா நாளைக்கு வந்துடறேன்னு சொல்லிட்டு புர்காவை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்….ஆயிஷா .
இந்தப் பத்து நாட்களும்…..எந்தப் பிரச்சனையும் வராமல் அவள் பாட்டுக்கு வந்த சுவடே தெரியாமல் சுத்தமாக….பம்பரமாய் ஓடி வேலை செய்து விட்டு சென்றவள்….திடுமென வராமல் இருப்பதன் காரணம் என்னவாயிருக்கும்…?
(இருங்கோ…மீதியும் இருக்கே…! )
வாசலில்….ஆயிஷா …..அவள் முகம்….கவலையில்…!
என்னாச்சு ஆயிஷா . உனக்கு….?.ரெண்டு வேளை,,,டும்மா…போட்டுட்டே….
தயக்கத்துடன்……அம்மா…அது வந்து….உங்க பக்கத்து வீட்டு செட்டியாரம்மா….என்னை வாசல்லயே மடக்கி…இனிமேல் இங்க நீ காலடி எடுத்து வைக்கக் கூடாதுன்னு மிரட்டினாங்கம்மா…அதான் வந்தவள் திருபப் போயிட்டேன்…….என்றாள்.
“இது நல்லாருக்கே…அவங்க எப்படி அப்படிச் சொல்லலாம்…..? என் வீட்டில் நீ வேலை செய்ய அவங்க பெர்மிசன் நமக்கு எதற்கு…? என்று கேட்டேன்.
அதில்லைம்மா..முடிஞ்சா ..நீங்களே வந்து பேசிப் பாருங்க…..அவங்க கிட்ட…என்று சொன்னதும்…..எனக்குள் ஏதோ
சுறு…சுறு….வென்று…..சு
அவர்கள் வீட்டின் முன்னால் நான் ஆஜரானதும்…ஜன்னல் வழியாக என்னைப் பார்த்த அந்த ராஜேஸ்வரி அம்மா…
கதவைத் திறந்து…வாங்க… என்றவர்….என் பின்னால் நின்ற ஆயிஷாவைப் பார்த்ததும்…முகம் கோணி மாற….நான் வந்த விஷயத்தைப் புரிந்து கொண்டவளாக…
வேணும்னா சொல்லுங்க..என் வீட்டு வேலைக்கார அம்மாவை நான் கேட்கறேன்…..”போயும் போயும் முஸ்லிம் வீட்டம்மாவ வேலைக்கு வைக்கலாமா ?.”….என்று எகத்தாளமாக…கேட்டாள்.
இதோ பாருங்க….நீங்க எப்படி என் வீட்டுக்கு வேலைக்கு வரவளை…..வராதேன்னு சொல்லி திருப்பி அனுப்பலாம்…அப்படியே சொல்லி இருந்தாலும்…என்கிட்டே ஒரு வார்த்தை நீங்க சொல்லி இருக்கணும்…..இது எந்த ஊரு நியாயம்.? ..என்று கேட்க…
அது சரி..முதல்ல உங்க வீட்டுக்குத் தான் இந்தம்மா வேலைக்கு வருதுன்னு தெரியாமல் இருந்துச்சு…பெறகு தான்
வாட்ச்மேன் சொன்னாரு….அய்யர் ஊட்டுல வேலைக்கு போகுதுன்னு…..எனக்கு நம்ப முடியலை….அது உங்க வூட்டுத் துணிய கொடியிலக் காயப் போடுறேன்னு….எங்க வீட்டுத் துணியை எல்லாம் தொடுது….எனக்கு இது கையி.காலு…மேல…படறது எல்லாம் சகிக்காது,,,,இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை…சொல்லிப்புட்டேன்….
ஆயிஷாக் கேவி,,,கேவி அழ ஆரம்பித்தாள்..
ஆயிஷா…நீ ஏன் இதுக்குப் போயி அழுதுகிட்டு……விடு..
ஏங்க….ஒரு மனிதாபிமானமே இல்லாமல் இருக்கீங்க….இந்தக் காலத்தில் ….ஜாதி..மதம்…ன்னு பேசி..ஒரு பெண்ணோட மனசைக் காயப் படுத்தறீங்க…..ஒரு பெண்ணாக இருந்துகிட்டு….
நாம ஒவ்வொருவரும்..இந்த ஜாதியில தான் நான் பிறக்கணும்னு எழுதி வாங்கிட்டா பிறந்து வந்தோம்….?,,,எனது கேள்வி அவர்களைத் தாக்கியதோ இல்லை…இதற்கெல்லாம் நான் அசந்தவள் இல்லை என்று..”.உங்களோட எனக்கென்ன பேச்சு…..இந்த அபார்ட்மெண்டில் எல்லாரும் இந்துக்கள் தான்….நாங்க இந்த பிளாட்டுக்கு ஓனர்ஸ்..
எனக்குள்…நான் அவமானப் படுத்தப் பட்டேன் என்ற உணர்வு மேலோங்கினாலும்….ஒரு ஆவேசமும்… அத்தோடு சேர்ந்து எழுந்தது. மறுபடி அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி…..
“உங்களுக்கு மனிதாபிமானம் தான் இல்லைன்னு நினைச்சேன்….குறைந்த பட்சம் பணிவு கூட இல்லையே…என்று சொல்லி….உங்க வீடு சொந்த வீடு தான்…ஒத்துக்கறேன்…..ஆனால்.
ஹாஸ்பிடல்ல போயி பாருங்க நீங்க…ஒரு தடவையாவது…..ஜாதி…ஜாதி…
அவங்களே ஒரு ஏழையா இருந்தால்….மனசுக்கு தோன்றியதெல்லாம்….பேசுவீங்க..
ஆயிஷா என் வீட்டில் தான் வேலை செய்வாள்….உங்களால் ஆனதை செய்து கொள்ளுங்கள்…பார்க்கலாம் ….. சொல்லி விட்டு…அவர்கள் வீட்டுக் கதவை நானே சாத்திவிட்டுத் திரும்பினேன்.
ஆயிஷா மறுபடி வந்து என் வீட்டில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறாள்….
ராஜேஸ்வரி அம்மாள்….இப்போதெல்லாம் என் வீட்டைக் கடக்கும் பொது..இரண்டடி நகர்ந்து ஏதோ தீண்டத் தகாதவர் வீட்டைத் தாண்டிச் செல்வது போன்ற பாசாங்குடன்…..செல்வதைப் பார்க்கும் பொது…நெஞ்சம் கொதித்தாலும் ஒரு மாதிரி சிரிப்பு தான் வருகிறது. “:என்று தணியும் இந்த ஜாதி…மத…பேதம்….? என்று மடியும் எங்கள் மனிதத் துவேசம் ?”
இந்தப் பரந்த உலகில் நம்மைச் சுற்றி இருப்பவர்களை சக மனிதர்களாக பார்க்கும் மனப் பக்குவம் நம் ஒவ்வொரு வருக்குள்ளும் வளரப் போவது எப்போது ? .. நாடு சுதந்திரம் பெற்று 65 வருடம் ஆயிருச்சி இனியாவது நம் குழந்தைகளிடத்தில் இந்த மனித நேய விதையை விதைத்தால்….எதிர்காலத்தில் …ஜாதி… மதம்…. இனம்…நிறம்.. என்ற கரும் மேகங்கள் விலகி…நாட்டில் வெளிச்சம்…வரும்…
- ரங்கராட்டினம்
- சே.ரா.கோபாலனின் “ மை “
- தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !
- ”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”
- குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
- முள்வெளி அத்தியாயம் -6
- சாதி மூன்றொழிய வேறில்லை
- பணம்
- வாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 21
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 17) எழில் இனப் பெருக்கம்
- 2-ஜி அலைக் கற்றை ஊழலும் இந்திய ஜனநாயகமும்
- ரோஜா ரோஜாவல்ல….
- வேறோர் பரிமாணம்…
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –10
- விவேக் ராஜகோபாலின் “ குறுக்கு வழியில் ஒரு டிராபிக் ஜாம் “
- தங்கம் 4 – நகை கண்காட்சி
- பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23
- கடவுளும் கடவுளும்
- நூபுர கங்கை
- அக்கினி புத்திரி
- மறு முகம்
- ‘ மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன் ’
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தேழு
- முன்னால் வந்தவன்
- பள்ளிப்படை
- நியாயப் படுத்தாத தண்டனைகள்..!
simply superb.ரசித்தேன்.ஆண்களை வில்லன்களாக்குவதிலிருந்து மாறி இப்போது சாதியை கையிலெடுத்திருக்கிறீர்கள்.தொடர வாழ்த்துக்கள்.
மதிப்பிற்குரிய தி.தா.நாராயணன் அவர்களுக்கு,
தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுத
தங்களது பின்னூட்டம் ஒரு ஊக்க சக்தியாக இருக்கிறது.
நன்றி.
ஜெயஸ்ரீ ஷங்கர்.
அன்பின் ஜெயஸ்ரீ,
நல்ல கதை… மனிதம் சொல்லும் சம்பவங்களின் தொகுப்பு. வாழ்த்துகள்.
அன்புடன்
பவள சங்கரி
அன்பின் பவள சங்கரி.,
தோழி…என்று விளித்தமைக்கு நன்றி.
தங்களது பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும்
மிக்க நன்றி. உங்கள் வல்லமை மிகுந்த
எண்ணத்தின், எழுத்தின் ரசிகை நான்…
என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
Author narrates religious discrimination of the people while employing servants for their household work…still in 21st century this type of discriminstion has been done here and there..congrats to jayshree shankar to deliver social awarness oriented stories.. keep it up!
Dear Mr.Ganesan,
Thank you very much for the positive comment..
Thanks.
YES! What JAYASRI SHANKAR has said in this story is totally true!. The country is still dark after independence at midnight 65 years ago. The black clouds of caste, religion and colour differences have enveloped the nation. It is time now to sow the seeds of humanity so that our future generation will live in peace and harmony . To impress this theme in the story the writer has narrated a simple incident that occured just ten days after she employs AISHA. As she is a MUSLIM, her neighbour RAJESWARI AMMA objects to it. The narrator’s confrontation with her and her arguments are written in style.Her references to the labourers who built the house and the hospital workers who look after the sick are exemplary! This story has been written with a usefil message which is the need of the hour. Writers have a great task of educating the masses which are still ignorant. Instead of wasting our time and energy writing without aims and objectives such writings are to be encouraged and appreciated. ANNA once said, ” KURIKOL ILLATHA EZHUTHU MANAM ILLATHA MANNAM PONDRATHU. ” AS usual all the best and looking forwatrd for your next story JAYASRI SHANKAR!…Dr.G.Johnson.
மதிப்பிற்குரிய டாக்டர்.ஜி.ஜான்சன் அவர்களுக்கு,
எப்பொழுதும் போல் தங்களின் மேலான பின்னூட்டம்…
எழுதும் உணர்வுகளுக்கு உயிர் ஊட்டி.. ஊக்கம் தரும்.
“குறிக்கோள் இல்லாத எழுத்து மணம் இல்லாத மலர் போன்றது….”
அண்ணா சொல்லிய வார்த்தைகளால் பாராட்டியதற்கு எனது
நன்றி.
ஜெயஸ்ரீ ஷங்கர்.
” KURIKOL ILLATHA EZHUTHU MANNAM ILLATHA MALAR PONDRATHU.”
ANNA. Sorry for the mistake in my previous comment…Dr.G.Johnson.
அருமையான ‘கதை’ ஜெயஸ்ரீ.
இனிய பாராட்டுகள்.
அன்பின் துளசி கோபால்..
தங்களின் மேலான பாராட்டுக்கு மிக்க நன்றி..
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
நற்கதையை சமூக சிந்தனையுடன் தந்தமைக்கு நன்றி , தொடரட்டும்
எனக்கொரு உணமை தெரிஞ்சாகனும். முஸ்லீமை வேலைக்கு வைத்துக் கொள்பவர் ஜாதி அய்யராகவும், எதிர்ப்பவர் ஜாதி செட்டியாராகவும் ( ஜாதி இந்து ) இருப்பதன் குறியீடு என்ன..? இந்த மாதிரி சூழலில் தான் எழுதியவரின் ஜாதி தெரியவேண்டும் எனும் எண்ணம் வருகிறது…
<>> இவர் ஏன் , பிசியோ தெராபி பண்ணுகிறவரை, வார்டு பாய் (கேர்ள்), நர்சிங்க் செய்பவர்களை கூலி ஆட்கள் என்று சொல்கிறார் என்று புரியவில்லை. தினக்கூலி என்பது போய், கணணி துறையில் வேலை பார்ப்பவர்களை மணிநேரக் கூலிகள் என்று சொல்வார்களா..? எழுத்தாளரின் பார்வையிலேயே ஏற்றத் தாழ்வின் பரிகாச வரிகள் வரலாமா…? மேலும், இன்று சர்வெண்ட் மெய்ட் என்ற ஆங்கில வார்த்தைகள் மூன்றாம் நிலை நகரங்களில் கூட மரியாதை வேலையாக மாறி வரும் சூழலில் இந்த வார்த்தை பிரயோகம் சரியா தெரியலை…
இது மெய்யாக நடந்த ஒரு ஜாதிச் சம்பவம் போல் தெரிகிறது. ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு செய்யும் கணக்கெடுப்பு ஆதரிப்பில் ஜாதி, மதம் ஒழிக்கக் கூச்சலிட்டுப் பல்லாண்டுகளாகக் கூத்தாடும் திராவிடக் கட்சிகளுக்கு நாட்டில் வரவேற்பு இருப்பது வியப்பாக இருக்கிறது. ஜாதிகள் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதித் தீண்டாமைகளை எப்படி எடுத்துக் காட்டுவது ? எல்லாரும் இவர் போல் “புனைப் பெயர்” வைத்துக் கொள்ள முடியமா ? இந்தப் புனை பெயரார் ஒளிந்து கொண்டு பிறர் மீது கல்லை விட்டெறிவது சிறு பிள்ளைத்தனமாக உள்ளது !
சி. ஜெயபாரதன்
அன்புள்ள ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களே
சிந்தனைகளில் நாம் சிகரம் ஏறிவிட்டோம்.ஆனாலும் அங்கே போய் கங்கைக்கு பதில் கூவத்தை தான் தேடுகிறோம்.இதுவே யதார்த்தம் என்பதை அற்புதமாக விளக்கும் சிறுகதை.பாராட்டுகள்.
அன்புடன்
ருத்ரா