நுடக்குரங்கு

 

 

பிச்சினிக்காடு இளங்கோ(13.1.2014 பிற்பகல் 1மணி முதல் 1.30 வரை)

 

 

அடுக்குமாடி கட்டத்தின்

கீழே

முதியோர் மூலையில்

அமர்ந்து

கவிதையைப்

பதிவிறக்கம்

செய்துகொண்டிருந்தேன்

 

அங்கேதான்

முதியவர்களின்

உடற்பயிற்சி கருவிகளும்

உள்ளன

 

அருகில்

அடுத்த இருக்கையில்

பெண்மணி ஒருவர்

பேராவலில் இருந்தார்

 

தடுப்புச்சுவரொன்று

தடுத்துக்கொண்டிருந்தது

 

தடுப்புச்சுவரிருந்தும்

இதயத்துடிப்பு கூடியது

 

பெண்ணென்றால்

பேயும் இரங்குமென்பது

பட்டெனப் புரிந்தது

 

இருக்கையைவிட்டு

எழுந்தபெண்மணி

சாலையைநோக்கி

விழிகளை

வீசித்தவிப்பது தெரிந்தது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காதலனைப்பார்க்கத்தான்

இந்தக்கரிசனமோ

குரங்குக்குத் தோன்றியது

 

பேருந்து

நிறுத்தத்தைநோக்கியே

நிலைகுத்தியிருந்தன

மான்விழிகள்

 

பேருந்திலிருந்து

வரவேண்டியிருக்குமோ

சந்தேகப்பிராணி

விருப்பம்போல் பிராண்டியது

 

பொல்லதாத

இல்லாத

விலங்குகளெல்லாம்

புரட்டியெடுத்தது குரங்கை

 

கவனம் சிதைந்து

கவிதை இறங்கவில்லை

கவிதை இரங்கவில்லை

 

பார்வை திசைமாற்றினேன்

தவித்துக்கொண்டுவந்தான்

தாயின்முகம்பார்க்க

 

அடடா அடடா

பாசமாய் உணவூட்டி

பள்ளி அனுப்பும்வரை

ஊனமாய்

ஊமையாய்

 

Series Navigation