நுரைகள்

மஞ்சுளா , மதுரை

கூடாரங்கள் போட்டு
குழுமியிருக்கின்றன
வாழ்வின் வண்ணங்கள்

ஒவ்வொரு கூடாரமும்
தன் வண்ணம் விற்க
கூவி அழைக்கிறது
மக்களை

வண்ணம்
தானே வளராத தன்மையினால்

வண்ணம் பற்றிய கதைகள்
நீட்டி முழக்கப்படுகின்றன

பொய்க் கதைகளுடன்
வாங்கப்பட்ட வண்ணங்களில்
உண்மைக் கதைகள்
இருப்பதாக நம்பிக்கை
காதருந்த மக்களுக்கு !

நுரை பொங்கிய வண்ணங்களுடன்
வெளியேறுகின்றனர் கூடாரங்களை விட்டு

நுரைகளை
ஊதி
தள்ளுகிறது காலம் !

        -மஞ்சுளா 
         மதுரை 
Series Navigationகுழந்தைகளும் கவிஞர்களும்