நூலக அறையில்

Spread the love

மஞ்சுளா

என் இரவுப் பாடலுக்காய் 

திறந்து விடப்பட்ட 

அறையெங்கும் 

பொங்கி எழுகிறது 

நூல்களின் வாசம் 

என் கண்களை 

களவாடிச் செல்ல காத்திருக்கும் 

வரிகள் 

எந்த நூலின் இடுக்கிலோ 

ஒளிந்திருக்கின்றன 

தேடித் திரிந்த பொழுதெல்லாம் 

களைத்துவிடாமல் 

இருக்க 

இளைப்பாறக் 

கிடைத்து விடுகிறது 

ஒரு கவிதை 

சிதறிய மணிகளை கோர்த்தெடுத்து 

சிந்தனைக் கோப்புக்குள் 

வைத்த 

அவையாவற்றையும் 

கொத்தி எடுக்கின்றன 

சிறு குருவிகள் 

கலையாமல் 

பாடிக்

கொண்டேயிருக்கிறேன் 

அறையின் நூல்களை 

தின்று கொண்டே….

                -மஞ்சுளா 

                  மதுரை 

Series Navigationமன்னிப்பு எனும் மந்திரச்சொல்இனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர்