பக்கத்து வீட்டுப் பூனை !

Spread the love

     

பக்கத்து வீட்டு வெள்ளை நிறக்

கொழு கொழு பூனை

நேற்று இரவில்கூட

குழந்தைக் குரலில்

” ஆவு … ஆவு … “என அழுத்து

அதன் கண்ணீரைத் துடைத்து

ஆறுதல் சொல்ல

அம்மா விரல்கள் இல்லை

அழுகையின் பின்னணியில்

பசியா ? வருத்தமா ?

தன் துணையை அழைக்கும் உத்தியா ?

மர்மத்தில்

மயங்கி நிற்கிறது உண்மை

அழுகையில்

முட்களின் வருடல்கள்

தொடர்கின்றன

அந்த ஒற்றைக் குரல்

அடிக்கடி

மௌனம் கிழிக்கிறது !

                    ++++++++++

Series Navigationகடலோரம் வாங்கிய காற்றுமகாத்மா காந்தியின் மரணம்