‘பங்கயம்’ இட்லி!

ரா.ஜெயச்சந்திரன்

‘நல்லாசிரியை’ சித்தி

 

சின்னத்தங்கைக்கு வாங்கி வந்த,

 

பேருந்து நிலைய பிரபலம்

 

‘பங்கயம்’ இட்லி

 

வேண்டுமென அடம்பிடிக்க,

 

களத்து வேடம் கலையாத

 

உமி அப்பிய அம்மா,

 

காலையில் கிண்டிய

 

உருண்டைச்சோற்றை

 

குழிக்கரண்டியில் தோண்டி

 

இட்லியாய்க் கவிழ்த்து,

 

கரட்டு மாங்காயை

 

ஒன்றிரண்டாய்த் தட்டி,

 

இலட்சுமி காரக்கரைசலில் அமிழ்த்தி,

 

உப்புக்கல் உதிர்த்து,

 

ஊட்டிப் பசியாற்றியதை எண்ண,

 

இன்று உண்ணும் பூ இட்லியும்

 

தொண்டையில் அடைக்கின்றது!

பணிவன்புடன்,

 

Series Navigationமுகங்கள் மறைந்த முகம்தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்