பணிவிடை

Spread the love

காலையும் மாலையும்
செல்ல நாயோடுதான்
சிறு நடை

வார்ப் பட்டை
ஒரு கையில்
கழிந்தால் கலைய
ஒற்றுத் தாட்கள்
மறு கையில்

அந்த ‘இனிய’
பணிவிடையில்
அலாதி இன்பம்
அம்மாவுக்கு

ஆனால்
பெற்ற குழந்தைக்கு
‘பெம்பர்ஸ்’ கலைவது
எப்போதுமே
பணிப் பெண்தான்

அமீதாம்மாள்

Series Navigationகனிகரம்40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்