பண்பாட்டு உரையாடல்

ஹெச்.ஜி.ரசூல்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்டக் கிளையினர் நடத்திய 33வது நாவா முகாம் இலக்கியப் பண்பாட்டு உரையாடல் மே21,22 தேதிகளில் முட்டம் கடற்கரைரிட்ரீட் மையத்தில் நடைபெற்றது. முதல்நாள் துவக்கவிழா அமர்வு முனைவர் சிறீகுமார் தலைமையில் நடைபெற்றது.இரண்டாம் அமர்வு சம கால கதை எழுத்து என்ற பொருள் பற்றியது.கதையாளரும் மலையாளமொழிபெயர்ப்பு படைப்பாளியுமான ஏ.எம்.சாலன் நிகழ்வை நெறிப்படுத்தினார்.

 

நாவலாசிரியர் ஜாகிர் ராஜா குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரையில் எனும் தலைப்பில் விரிவானதொரு ஆய்வுரையை வழங்கினார்.பேரா.நட.சிவகுமார் தமிழில் கால்வினோவும் பிறரும் எனும் தலைப்பின்கீழ் தமிழில் வெளியாகியுள்ள மாந்திரீக கதை எழுத்தாளர்களின் படைப்புலக்ம் பற்றி அறிமுகம் செய்துவைத்தார்.கதையாளர் குறும்பனை பெர்லின் முக்குவர்வாழ்வியல் சார்ந்த தனது படைப்பனுபவம் வெளிப்பட்டிருக்கும் கதை எழுத்தை பதிவு செய்தார் . தொடர்ந்து பங்கேற்பாளர்களின் உரையாடல்களும் விவாதங்களும் நடை பெற்றன.

 

இரண்டாம் அமர்வினை மார்க்சிய சிந்தனையாளர் சி.சொக்கலிங்கம் நெறிப்படுத்தினார்.எழுத்தின் அரசியல் – முனைவர் ந.முத்துமோகனின் பன்முக தத்துவ ஆய்வியல் எழுத்தில் அம்பேத்கர் வழி தலித்திய உரையாடல் வி.சிவராமன்,மார்க்ஸுக்குப் பின் மார்க்ஸியம் ஆ.பிரேம்குமார்,பின்காலனிய அரசியலும் நவீன மார்க்ஸிய புரிதலும் குறித்து முனைவர் எம்.முரளி இஸ்லாம் மற்றும் எதிர்க் கதையாடல்கள் பற்றி ஹெச்.ஜி.ரசூல் ஆகியோர்களும் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். விவாதங்கள் இடையறாது தொடர்ந்தது.தொடர்ந்த முனைவர் ந.முத்துமோகனின் பாராட்டரங்கில் நாவலாசிரியர் பொன்னீலன்,முனைவர் தொ.பரமசிவம் உள்ளிட்ட அறிஞர்கள் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வை கவிஞர் ஜி.எஸ்.தயாளன்,எஸ்.ஜே.சிவசங்கர் தொகுத்தளித்தனர்.

 

இரண்டாம்நாள் அமர்வில் திணைசிறப்பிதழ் வெளியிடப்பட்டது.எழுத்தாளர் ஆங்கரைபைரவி தலைமையேற்க கண்ணன் அண்ணாச்சி, கவிஞர் ந.நாகராஜன், எஸ்கே.கங்கா ஆகியோர் பங்கேற்றனர்.தொடர்ந்து நடைபெற்ற அமர்வு தமிழ் அடையாளம் பண்பாட்டின் புதிய அசைவுகள் எனும் பொருளில் ந. முத்துமோகன்,எழுத்தாளர் குமார செல்வா,ட்கவிஞர் கலியபெருமாள் பங்கேற்ற கூட்டுக் கலந்துரையாடலில் பல ஆய்வாளர்கள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.தொடர்ந்த அமர்வில் விளிம்புநிலை எழுத்தும் இனவரைவியல் மரபும் பொருளில் அருந்ததியர் பற்றி அருள்திருபேசிலும் அஞ்சுவன்னம் முஸ்லிம் பற்றி ஹாமீம் முஸ்தபாவும் களப்பணி சார்ந்த தங்கள் ஆய்வினை வாசித்தனர். இருநாள் நடைபெற்ற இம் முகாமில் தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் ஆய்வாளர்கள் கவிஞர்கள்,கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை மன்ற பொருளாளர் எம்.விஜயகுமார் மாவட்ட செயலாளர் வி.சிவராமன் முன்நின்று நடத்தினர்.

 

Series Navigationபாதைகளை விழுங்கும் குழிபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்