பயணங்கள் முடிவதில்லை

Spread the love
 
மனிதர்களுக்கென்ன 
ரயிலேறிப் போய்விடுகிறார்கள் 
 
கசிந்த கண்ணீருக்கும் 
குலுக்கிய கைகளுக்கும் 
மென்தழுவலுக்கும் 
மௌன சாட்சியாய்க் கிடக்கும் 
நடைமேடையையும் 
உயரத் தூண்களையும் 
கழிப்பறை வாடை கருதாமல் 
பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி 
நிற்கும் 
பெயர் தெரியா இம்மரத்தையும் 
என்ன செய்வது…..
-உமாமோகன்
Series Navigationவிதிவிலக்குஅப்பா எங்க மாமா