பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு

 

 ச. வெங்கடேஷ்

நூல் தொகுப்பாளர் சி. ரவி சொலவது போல் அரசியல், கலை, இலக்கிய அபிப்ராய மாறுபாட்டின் மேடையாகவும், திருப்பூர் படைப்பாளிகளின் சிந்தனை பகிர்தலின் பொது தளமாகவும் அமைந்துள்ளது இத்தொகுப்பு..

 

தனி மனிதனின் உள்ளார்ந்த மன அவசங்கள், அறச்சீற்றங்கள், போலித்தனங்கள், யதார்த்த உண்மைகள் போன்றவற்றை வெளிக்காட்டும் விதமாக சிறு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவை இந்நூலில் பதுவாகியுள்ளன.

 

சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை, கலாச்சார சீரழிவைத் தடுக்கும் முயற்சிகள் மறைந்து போன வரலாற்று நிகழ்வுகள், நூல் விமர்சனங்கள், கூட்ட நிகழ்வுகள், திரைப்பட மற்றும் குறும்படச் செய்திகள் போன்ற பல்வகை அம்சங்கள் தொகுப்பு முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.

 

திருப்பூர் பற்றி சுப்ரபாரதிமணியனின் பேட்டி ஆற்றங்கரையில் எதிரே அமர்ந்து மணலை அலைந்தபடி பேசிக் கேட்டுக் கொண்டிருந்தது போல அந்தக் கால பளிங்கு நொய்யல் நதி நீரோட்டமாக இனிக்கின்றது.

 

மின்னும் வைரங்களில் எத்தனை ரகங்கள்! சமுதாய நல போக்கும், வியத்தகு ஆளுமைப்பண்புகளு நம்மை மிகவும் யோசிக்கச் செய்கின்றன.

 

நையாண்டித் தனமும், ‘சுருக்’கென்று குத்தும் நடையும் கொண்ட சாமக் கோடாங்கியின் எழுத்துப் பகுதி குறிப்பிட்டு சிலாகிக்க வேண்டிய சமாச்சாரம் ஆகும்.

 

45க்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் 50க்கும் மேற்பட்ட படைப்புகளுடன் ஓவியர் சிராஜ் அவர்களின் நுணுக்கமும், பொலிவும் கொண்ட அழகிய அட்டைப்படத்துடன் படைக்கப்பட்ட ஒரு வாசிப்பு விருந்து என்றே இத்தொகுப்பினை கூறலாம்.

 

பக்கம் : 170.,விலை : ரூ.70  பதிப்பு : 2012, கனவு, திருப்பூர். தொகுப்பு.சி.ரவி

 

Series Navigationஎகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22