பழக்கம்

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

கவிதை ஏடெங்கே என்றால்

காகிதக் கூடையாயிற்று என்கிறாள்

பாட்டுப் படிக்கிறேன் என்றால்

காதைப் பொத்திக்கொள்கிறாள்

கித்தாரை எடுத்து வைத்தால்

கதவைச் சாத்திக்கொள்கிறாள்

சித்திரமும் கைப்பழக்கம்,

செந்தமிழும் நாப்பழக்கம்,

இப்படிக் கதவடைப்பதும்

காதைப் பொத்துவதும்

என்ன பழக்கம்?

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationகவிஞர் அம்பித்தாத்தாதொடுவானம் 134. கண்ணியல்