பழந்தமிழரின் நிலவியல் பாகுபாடு

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

நிலம் என்பதற்கு தமிழ் நிலம் என்று பொருள்கொள்ளப்படுவது நோக்கத்தக்கது. தமிழர்;கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை நிலங்களாகப் பாகுபடுத்தினர். நில அமைப்புகளைக் கொண்டே அவற்றிற்குப் பெயரிட்டனர். ‘‘நிலம் என்பதற்கு இடம், தலம், நானிலத்தின் பொது தேசம் பூமி’’ எனும் பல பொருள்களை மதுரைத் தமிழ்ப் பேரகராதி’’ (மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரண்டாம் பாகம் ப. 101.) குறிப்பிடுகிறது. தமிழர்களின் நிலவியல் பாகுபாடு குறித்த பல்வேறு செய்திகள் சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

நானிலம்

‘‘நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நால்வகைப்பட்ட நிலமுடையது’’ என்று நானிலம் என்பது குறித்து அறிஞர்கள் விளக்குகின்றனர். தமிழ்க் கலைக்களஞ்சியம் ‘‘நானிலம் என்பது முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களைக் குறிக்கும். இவ்வாறு தமிழகத்தை முன்னோர்; பிரித்திருந்தனர்’’ (கலைக்களஞ்சியம் தொகுதி 6.)

என்று கூறுகிறது. எனவே தமிழகம் நான்கு நிலப் பாகுபாட்டினைக் கொண்டு இருந்தமையால் ‘நானிலம்’ என்றே வழங்கப்பட்டது.

‘‘நாவ நழீஇயவிந் நானிலந் துஞ்சும்’’

(திருக்கோவையார் பாடல் எண் 191.)

என்னும் திருக்கோவையார் அடியும் இதற்குச் சான்று பகர்கிறது.

இதற்குத் தொல்காப்பியமே அடிப்படையாக அமைகிறது. தொல்காப்பியர் இந்நிலப்பாகுபாட்டினை ‘‘மாயோன் மேய’’ (அகத். நூற்பா,5) என்ற நூற்பாவில் வரையறுத்துக் கூறியுள்ளார்;. அவரைப் பின்பற்றியே தமிழகத்தை நானிலமாகப் பகுத்து நானிலம் என்று அழைத்தனர்; எனலாம்.

முதல் நிலம்

பூமியில் முதன் முதலில் மலைகள் தோன்றின. அதன் பின்னரே ஏனைய பகுதிகள் தோன்றின எனலாம். ஐயனாரிதனார் என்னும் புலவர்

‘‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றி மூத்த குடி’’

(புறப்பொருள் வெண்பாமாலை கரந்தைப் படலம் நூற்பா 14.)

என்று கூறியிருப்பது நோக்கத்தக்கது.

தமிழினம் மிகப் பழங்காலத்தில் தோன்றிய மூத்த முதல் இனம் என்று குறிப்பிட்ட புலவர் நிலவியல் வரலாற்றுச் செய்தியையும் குறிப்பிட்டுள்ளார். மலையோடு தொடர்புடைய குறிஞ்சி நிலமே மனித வாழ்விற்கேற்றவாறு அமைந்த முதல் நிலம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘தமிழ்நாட்டு நாகரிகம் மற்ற சிறந்த நாகரிகங்களைப் போல குறிஞ்சி நிலத்தில் தோன்றியது. நீரும் நிழலும் தற்காப்பிற்கான இடங்களும் உணவுப் பொருள்களும் ஒருங்கே கிடைக்கப்பெறும் நிலம் குறிஞ்சி நிலமே ஆகும்’’ (தமிழ் நாட்டு வரலாறு, தொல்பழங்காலம், ப. 40) என்பார் கூற்றும் ஈண்டு நோக்கத்தக்கது.

கனிப்பொருள் கலையியல் வல்லுநரான புகழ் மிக்க பேராசிரியர் கௌலந்து

‘‘ஐரோப்பாவில் இரும்புத் தொழில் தொடங்குவதற்கு முன்பே தென்னிந்தியாவில் இரும்புத் தொழில் செய்யப்பட்டு வந்ததாக அறிஞர;கள் கருதுகின்றனர். அங்கு இரும்பை உருக்கிக் காய்ச்சுவதைத் தற்செயலாகவே ஆதிகாலத்திய மக்கள் கண்டறிந்திருக்க வேண்டும். கற்கருவிக் கால மக்கள் பெரிதும் குன்றுகளிலும் மலையுச்சிகளிலும் வளமிக்க செறிந்த காடுகளின் ஓரங்களிலும் வாழ்ந்தனர்;. இரும்பினைக் கண்டறிந்த பிறகே ஆதிமனிதர்; காட்டினைத் தம்முடைய வாழ்விடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதுவது பொருத்தமாகத் தோன்றுகிறது’’ (மேற்கோள் விளக்கம் மு. தங்கராசு சங்க இலக்கியத்தில் நிலவியல் ப. 13)

என்று குறிப்பிடுகிறார். இக்கருத்தும் குறிஞ்சி நிலமே பூமியில் தோன்றிய முதல் நிலம் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.

மனிதனின் இன்றியமையாத் தேவையான உணவுப் பொருள்கள் இயற்கையில் மிகுதியும் கிடைக்கின்ற இடம் மலைப்பகுதி ஆகும். முதன் முதல் மனிதன் இயற்கையில் கிடைத்த காய், கனி, கிழங்கு முதலியவற்றைத்தான் உண்டு வாழ்ந்திருக்க வேண்டும். அதனால் மலை நிலமே முதல் நிலம் என்பது பொருத்தமுடையது. இந்த மலை நிலத்தைத்தான் பின்னர் தொல்காப்பியரும் பிறரும் குறிஞ்சி என்று பெயரிட்டு அழைத்தனர்.

தொல்காப்பியரின் நிலவியல் வைப்புமுறை

தொல்காப்பியர் தமது நூற்பாவில் முல்லையை முதலில் வைத்துள்ளார் (அகத்., நூற்பா, 5) இதற்கு ‘‘இனி முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற முறையென்னை யெனின் இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றிய ஒழுக்கமாதலின் கற்பொடு பொருந்தியக் கணவன் சொற்பிழையாது இல்லிருந்து நல்லறம் செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின் அது முற்படக் கூறப்பட்டது. எனவே முல்லை என்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று. ‘முல்லை சான்ற முல்லையம் புறவின்’ என்பவாகலின் புணர்தலன்றி இல்லறம் நிகழாமையிற் புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். இதற்குக் காரணம் இருந்தது. கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து என்பது கரு. புணர்ச்சிப் பின் ஊடல் நிகழ்தலின் அதன் பின் மருதத்தை வைத்தார். மருதஞ் சான்ற மருதத் தண்பணை என்புழி மருதமென்றது ஊடியுங் கூடியும் போகம் நுகர்தலை. பரத்தையிற்பிரிவு போலப் பிரிவொப்புமை நோக்கி நெய்தலை ஈற்றின்கண் வைத்தார்’’ (தொல்.பொருள்

Series Navigationகுகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடுஈக்கள் மொய்க்கும்