பாண்டித்துரை கவிதைகள்

1.
மாயா
அந்த ஒரு வார்த்தையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்
2.
மாயா
கவலையை
மிகச் சிறியதாக்குகிறாய்
மிகச் சிறிய கவலையை
எளிதாக்கிவிடுகிறாய்
3.
மாயா
நீ
தர மறுத்த
அந்த முத்தத்தில்தான்
நான் இருக்கிறேன்
4.
ஒருவருக்கும் தெரியாது
இந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று
சிராங்கூன் சாலை சூர்யா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவன்
வீர காளியம்மனை சுற்றிக்கொண்டிருந்தேன்
5.
மீராஸ் உணவகத்தில்
8 மணிக்கு வடை ஆறிப்போய்தான் இருந்தது
நல்லாயிருக்குமென்று
வாங்கிச் சாப்பிட்ட நண்பன் சொன்னான்
வடை நேற்று போட்டதோ
6.

வீர காளியம்மன் கோவில் பின்புறத்தில்
வேகமாக வந்த ஒருவர்
என் முகத்தில் லட்சுமி கலை இருப்பதாக சொன்னார்
லட்சுமி கலைதான் இருக்கு லட்சுமி இல்லை என்றேன்
சிரித்துக்கொண்டே நகர்ந்தார்
இன்னொருவர் முகத்தில் லட்சுமி கலையை தேடி
Series Navigationதினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !கேள்விகளால் ஆனது