பாலியல் சமத்துவம் இன்னும் நூறாண்டு காத்திருக்கணும்..

This entry is part 6 of 11 in the series 15 ஜனவரி 2023

சுப்ரபாரதிமணியன்

Female diverse faces of different ethnicity seamless pattern. Women empowerment movement pattern International womens day graphic in vector.
    நான் வசிக்கும் வீதியில் உள்ள அரசு அலுவலக பெண்மணி ஒருவர் சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றில் பொருட்களை வாங்கிக் குவித்த பின்னால் பணம் செலுத்துவதற்காக அவர் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து,  நிறைய ரூபாய் நோட்டுகளை சேர்த்து பதட்டமாக இருந்தார். பணம் குறைவாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். அவரை அணுகி எதற்கு இப்படி ரூபாய் நோட்டுகளை தேடி அலுத்துப் போகிறீர்கள். ஜி பேயில் அனுப்ப வேண்டியது தானே என்றேன். ” எனக்கு ஜி பே கணக்கு  இல்லை. என்  ஏடிஎம் கார்டு கூட என் கணவரிடம் தான்  நெடுங்காலமாக உள்ளது” என்றார். அதிர்ச்சியாக இருந்தது

பெண்கள் வேலைக்குப் போவதாக இருந்தாலும் பொருளாதார நிலையில் அவர்கள் மேற்பட்டிருந்தாலும் அவர்களுடைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது.

. இந்தியாவில் பாலின சமத்துவம் அடைவதற்காக இன்னும் 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் நல ஆணையத்தின் சமீபத்திய ஆய்வு என்று தெரிவித்திருக்கிறது.. இது கூட ஒரு வகையில் வன்முறையாக மாறிவிடுகிறது.. ஏடிஎம்மை பெண் பயன்படுத்த ஆண்கள் வைக்கும் தடை அல்லது அது என்னிடமே இருக்கட்டும் என்று சொல்வது இதெல்லாம் ஒரு வகை பாலின சமத்துவ மின்மையின் அடிப்படையில் இருக்கின்றன.

” . நீ ஒழுங்கா இருந்தா எதுக்கு இதெல்லாம் நடக்குது. நீ இப்படி எல்லாம் டிரஸ் போடணுமா, எதுக்கு ராத்திரில கண்ட நேரத்தில் வெளியே போவது “ என்பது தான் இது சார்ந்து வைக்கப்படுகிற புகாரின் மீது எதிர் வினையாக இருக்கிறது. எது நடந்தாலும் அது பற்றிய பதிவுகள் காவல்துறையிடமோ அல்லது அரசு சார்ந்த நிறுவன புகார் பட்டியலில் 75 சதவீதம் அவை பதிவு செய்யப்படுவதில்லை. குடும்பத்தின் கட்டுமானம், குடும்பத்தின் அமைதி கருதி அவை பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யும் புகார்கள் தாண்டி பின்னரும் வேறு செயல்பாடுகள் இல்லாமல் முடங்கி போயிருக்கிறார்கள். பெண்கள் கணவரிடமிருந்து ஏடிஎம் பெற இயலுவதில்லை பல சமயம்.ஒரு அரசு அலுவலர் பெண் கூடத் தயங்குகிறார். தன் மீறல் சார்ந்து.

கணவர் அடித்தால் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கணவர் அடிப்பது கூட நல்லதுக்கு தான் என்று நம்பும் பெண்கள் ஏகதேசம் இன்றும் இருக்கிறார்கள்.

வீட்டிலும் வேலை செய்யும் இடங்களிலும் வெளியிலும் பெண்களுக்கான அவமதிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதே சூப்பர் மார்க்கெட்டில் அன்று பார்த்த சக ஊழியர் பெண் நோக்கி இன்னொரு ஆண் சைகை மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது அவரை கொச்சைப்படுத்துகிற விஷயம் என்பது தான் எனக்கு புரிந்தது.. இவ்வாறு மனரீதியாக துன்புறுத்தல்களும், சைகை மூலமாக சொல்லுவதும், பிறரைப் பற்றி தேவையில்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதும், கேலியாக புனைப்பெயரை வைத்துக்கொண்டு அழைப்பதும்., தேவையில்லாத செய்திகள் சொல்வதும், வசவுகள் மூலமாக வேலை செய்யாமல் முடக்குவதும் பெண்கள் மத்தியிலும் ஆண்கள் செய்யக்கூடிய அதிகார தொனி தான் தென்படுகிறது.

. வேலைக்கு போகாதே, கெட்டுப் போகாதே என்று சொல்கிற பழைய தலைமுறையும் என்றும் இருக்கிறது, வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொன்ன மதவாதிப் பெரியோர்கள் கூட இருக்கிறார்கள். நாங்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கிறோம். அதோடு சரி என்னுடைய பங்களிப்பு குடும்பத்தில் முடிந்து விடுகிறது என்கிறார்கள். ஏன் இவையெல்லாம் புகார் செய்யப்படுவதில்லை என்ற கேள்விக்கு ” படிச்சிருந்தா தெரியும். தைரியம் வரும் அதனால எங்க குழந்தைகளை படிக்க வைக்கிறோம் “ என்று சொல்கிற பெண்கள் இருக்கிறார்கள்.

. கமலஹாசன் தேவர்மகன் திரைக்காட்சியில் சொல்வது போல இதெல்லாம் வேண்டாம்பா. புள்ள குட்டிகளை படிக்க வையுங்கள் என்பதைப் போலத்தான் கடைசியாக அந்த பெண்மணிகள் சொல்லிப் போகிறார்கள்.

ஆனால் வெளியே போகாதே என்று கட்டுப்படுத்திய காலங்கள் போய், வெளியே போய் பிரச்சனைகள் என்ன இருக்கிறது என்று சந்தித்து விட்டு வா என்று சொல்லும் புதிய தலைமுறை பெண்களும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பாராட்டுக்குறியவர்கள்.. இவருடைய உரிமைகளும் பேச்சும் 33% பஞ்சாயத்து வரைக்கும் தான் வந்திருக்கிறது. 50 சதவீதம் என்று சொன்னதெல்லாம் இன்னும் சட்டமாக கூட முறைப்படுத்தப்படவில்லை. சட்டப்படுத்துகிற இடங்களில் அதற்காக வைத்திருக்கிற குழுக்களின் சம்பிரதாயமாகவே நடக்கிறது, பாலியல் புகாரோ பாலியல் சமத்துவம் பற்றிப் பேசுகிற பெரும்பான்மையானக் குழுக்கள் கூட சம்பிரதாயமாக நடந்து கொள்கின்றன. ஒரு குழுவின் அறிக்கை தருவதற்காக தயாரிக்கப்படுகிற விஷயங்களில் கையெழுத்து போடுகிறவர்களாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்,” வா. ஒரு காபி சாப்பிடு, கையெழுத்து போட்டு போ ”என்ற ரீதியில் தான் அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லப்படுகின்றன, மற்றபடி அறிக்கை தயார் தான்.

சமீபத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று பாலியல் பாதிப்புக்கு உள்ளானது. அந்த குழந்தையின் பதற்றத்தை அம்மா தெரிந்து கொண்டார். புகார் அளித்தாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் அந்த குழந்தை ..ஆனால் மருத்துவர், காவல்துறை அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகள் எல்லாமே அந்த குழந்தையின் கற்பனை அது என்று சொல்லி நிராகரித்தார்கள். எந்த நிலையிலும் இதை ஒரு வழக்காக மாற்றுவது என்பதிலிருந்து தப்பிப்பதற்காக குழந்தையின் கற்பனை அது என்று எல்லோரும் வாதித்து அந்த குழந்தையின் அம்மாவை நிராகரித்தார்கள். அந்த பெண்மணி காயப்பட்டு போய் ஒதுங்கிக் கொண்டார்.

திருமணங்களில் பெண்களும் மெட்டி போடுகிறார்கள் ஆண்களும் மெட்டி போடுகிறார்கள். ஆனால் பெண்கள் போடும் மெட்டி காலம் முழுக்க காலில் இருக்க வேண்டி இருக்கிறது. ஆண்கள் போடும் மெட்டி சடங்குகளுக்காக இருக்கிறது. திருமணச் சடங்குகள் முடிந்து அவை கழட்டி எறியப்படும். அப்படித்தான் பாலின சமத்துவம் சார்ந்த கேள்விகள் கூட அலட்சியப்படுத்தப்படும்.

நம் தமிழ் கவிஞர்கள் கவிதைகளை எழுதுகிற போது பெண்களை நோக்கி சகி சகி என்ற வார்த்தைகளை சொல்வார்கள். சகியே என்று அழைப்பார்கள். இப்போது அரசாங்கம் சகி என்ற பெயரில் தான் பாலின சமத்துவம் சார்ந்த உதவும் எண் 181 என்று நிறுவி இருக்கிறது.. இன்னொருவர் இப்படித்தான் ஒரு சகி என்பது பற்றி ஒரு கவிதை எழுதி காண்பித்தார். குரூரமாக இருந்தது

“ கூட்டுப் பாலியல் புகார் தர

காவல் நிலைக்குச் சென்றாள்

அந்த கன்னி.

காவல் நிலையத்தில் இருப்பவர்கள்

அவள் மேல் தொடுத்தது

கூட்டு பாலியல் தாக்குதல்”

Series Navigationஒரு மரணத்தின் விலைகாற்றுவெளி தை இதழ் (2023)
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *