வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 சுப்ரபாரதிமணியன் வடகிழக்கு இந்தியாப்பகுதிகளை சுற்றிப் பார்க்கிற போது பல மணிநேரங்கள் பயணம்… அதன் பின்னால் ஒரு அருவியை, ஒரு பெரிய குகையை, ஒரு பள்ளத்தாக்கினைப் பார்க்க நேரிடும். பல பேருக்கு இந்த நீண்ட பயணம்… .ஓர் இடம் என்பதெல்லாம் அலுப்பு தரக்கூடும் நான்கு மணி நேரம் பயணித்து விட்டோம் ஒரு அருவியை தூர இருந்து ரசித்து விட்டு வர வேண்டும் .அருவியில் குளிக்க வாய்ப்பு கூட இருக்காது இதற்கு ஒரு நான்கு மணி நேர பயணம் என்ற கேள்வி வரும். அருவியை பார்க்கிற அனுபவம் தாண்டி அந்த […]
உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று என்றும் ஆசியாவின் தூய்மையான நதி என்றும் மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் நதி அல்லது ட்வ்கி நதி சொல்லப்படுகிறது. நொய்யல் முதல் கங்கை வரை சாயக்கழிவுகள், வீட்டுக்கழிவுகள் எனப் பார்த்து நொந்து போன மனதிற்கு ஆறுதல் தரும் செய்தி இது மேகாலயாவில் உள்ள ஒரு ஆற்றின் நீர் மிகவும் சுத்தமாகவும், ஆற்றின் கீழே உள்ள பசுமை மற்றும் கற்பாறைகள் தெளிவாகத் தெரிகிறது. இதனால் படகு தண்ணீரில் மிதக்காமல் நடுவானில் பறப்பது […]
ஞாயிறு அன்று திருப்பூர் சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் நடந்த இலக்கிய விழாவில் தமிழகத்தைச் சார்ந்த 66 எழுத்தாளர்களுக்கு திருப்பூர் இலக்கிய விருது 2022 வழங்கப்பட்டது. “ இன்றைய கணினி மற்றும் தொழில்நுட்ப உலகத்தில் தமிழின் தொன்மையும் கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம் அதைச் செய்கிற பணியில் எழுத்தாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.அதை தங்களின் சமூகப்பணியாக்க் கொண்டு எழுத்தாளர்கள் செயல் பட வேண்டும் “ என்று திருப்பூர் மாநகராட்சியின் துணை மேயர் பாலசுப்ரமணியம் அவர்கள் […]
சுப்ரபாரதிமணியன் தாவணி , பாவாடை நம்மூர் இளம் பெண்களின் உடையாக இருக்கிறது. அஸ்ஸாமில் இந்த உடை உண்டு. இதன் பெயர் மேகலா சத்தர். பருத்தியில் வெள்ளை நிறத்தை விரும்பி அணிவார்கள். மென்மையான பாட் என்ற பட்டிலும் எறி, முகா என்ற முரட்டு பட்டிலும் இந்த ஆடை உண்டு. இவைகள் பொன்னிறத்தில் இருக்கும். பிஹூ நடனம் நடக்கும் இடங்களில் மேகலா சத்தர் அணிந்த பெண்கள் சுலபமாகத் தென்படுவார்களாம் . பிஹூ நடனம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நிகழ்த்தப்பெறும் ஒரு நாட்டுப்புற […]
பாறைகளும், குகைகளும் வேர்ப்பாலங்களும் சுப்ரபாரதிமணியன் பிரபு சாலமன் இயக்கிய ” கயல்” படத்தில் சிரபுஞ்சி வேர்பாலத்தில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. காதல் ரசம் சொட்டும் நெருக்கம் காதலர்களிடம் இருக்கும் .அதை கவனித்த சென்னை கண்ணய்யா அவர்கள் அந்த இடத்தைப் பார்க்க வேண்டுமென்றார். அந்த இடம் டூயட் பாட இளசுகளுக்கானது. வேடிக்கை பார்க்க கூட வயதானவர்கள் அங்கே போய் சிரமப்படக்கூடாது என்றேன். டபுள் டக்கர் வேர்ப்பாலம் ஒன்று உள்ளது. அதைக்காணச் செல்லவே சிரமப்பட வேண்டியிருந்தது. . இதே சிரபுஞ்சியில் […]
சுப்ரபாரதிமணியன் · உலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள இடம் சிரபுஞ்சி என்னும்சோரா அல்லது சோஹ்ரா. · இந்தியாவின் வடக்கே சுட்டெரிக்கும் தார்பாலைவனம். கிழக்கே மிகவும் ஈரப்பதமான சிரபுஞ்சி. ஆனால் நாங்கள் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களில் மழை எதுவும் இல்லை. குடையில்லாமல் அந்த ஊருக்குள் நுழைய முடியாது என்றார்கள். ஆனால் புல்வெளிகளும் கூட காய்ந்து கிடந்தன. புவிவெப்பயமாதலின் விளைவுதான் இங்கும் பாதிப்பாகியுள்ளதாகச் சொன்னார்கள். அது சார்ந்த விளக்கங்களுக்கு கடைசிப்பத்தியைப் பாருங்கள். உடனே அல்ல.. இக்கட்டுரையை மெதுவாகப் படித்து […]
சுப்ரபாரதிமணியன் ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடக்கும் போது வந்தால் நன்றாக இருக்கும். இயற்கையை இன்னும் அனுபவிக்கலாம் என்று எங்கள் சுற்றுலா குழு மேலாளர் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார். சாலையின் இருப்பக்கத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வசந்தக்காலம் தொடங்குவதற்கான அடையாளமாக அது இருக்குமாம்.. இந்தியா மற்றும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேகாலாயாவின் அழகை காண வர வேண்டும். செர்ரி பூக்களை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் ஜப்பான், அமெரிக்கா […]
சுப்ரபாரதிமணியன் மேகாலயா என்பது மேகங்களின் கூடாரம் என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம்.பேபே நீர்வீழ்ச்சி, கிராங்க் சூரி நீர்வீழ்ச்சி ஆகியவை அடர்ந்த மலைகளின் மத்தியில் அமைந்துள்ளவை . எங்கும் குளிக்க இயலாது குற்றாலம் அல்லது கோவைக்குற்றாலம், திருமூர்த்தி மலை போன்ற நீர்வீழ்ச்சிகள் தரும் குளியல் இன்பத்தை இவைதரவில்லை. பார்வையில் பிரமாண்டமும் வியப்பும் பயமும் தரக்கூடியவை பயம் தந்த இன்னொரு விசயம் குளிர்.இவை கடந்து ஷில்லாங்கின் பகுதிகளைக் குளிரூடே அடைந்த இரவு நேரத்தில் சரியானகுளிர் பாதுகாப்பு உடை இல்லாததால் உடம்பு நடுங்க ஆரம்பித்துச் சிரமம் தந்தது எனக்கு . […]
சுப்ரபாரதிமணியன் பருத்தியும் தேயிலையும் சுற்றுலாப் பேருந்தில் குவாஹாட்டியில் சுற்றும் போது அடிக்கடி பருத்தி பல்கலைக்கழகம் கண்ணில் பட்டது. விவசாயக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கேள்விப்பட்ட்துதான். இது என்ன புதிதாய் .. இது இருக்க வேண்டிய இடம் கொங்குப்பகுதியல்லவா என்ற எண்ணம் வந்தது (முன்னர் காட்டன் கல்லூரி என அறியப்பட்டது) என்பது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டியில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும் . […]
சுப்ரபாரதிமணியன் (வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மார்ச் 2022 மாதத்தில் காணப்பட்ட செய்தியைக் கவனியுங்கள் ) அசாம் மாநிலம் …ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் சடலத்தை மீட்டு ரெயில்வே போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அசாம் மாநிலம் கில்சாரில் இருந்து கோவைக்கு வாரந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ந்தேதி கில்சாரில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டது. அசாமை சேர்ந்த […]
பின்னூட்டங்கள்