பிரகடனம்

Spread the love

ஸிந்துஜா 

இன்று

இருப்பவனுக்குப் 

பொறாமையையும்

நாளை

வருபவனுக்கு

மகிழ்ச்சியையும் 

தருபவனே   

கலைஞன். . .

விரல்கள் வழியே 

நினைவுகள் 

வழிகின்றன. 

மனதின் ரத்தம் 

பரவி நிற்கிறது 

கறுப்பும் வெளுப்புமாய்.

உலகு பேசுகையில் 

கேட்காத செவிகள் 

உலகு பார்க்கையில் 

நிழல் தட்டி 

மறைக்கும் 

கண்கள் 

உலகு உணர்கையில் 

நிரம்பும் வெற்றிடம் 

இவை மூன்றும்  

தா.

Series Navigationஆயுள் தண்டனைஏழை ராணி