புதிய சுடர்

இப்படியொரு புயல் அடிக்குமென்று 
எந்த அரசியல்வாதியும்
இதுவரை நினைத்துப் பார்த்திருக்க 
வாய்ப்பில்லை 
இப்படியொரு கத்தி 
கழுத்திற்கு வருமென்று 
தேசத்தை சுரண்டுவோர் யாரும் 
சிந்தித்து இருக்கவும் 
வாய்ப்பில்லை .

இந்த தேசத்தேரை 
நல்வழியில் செலுத்த 
எந்தக் கறை படியாத கரம் 
நீளுமோ என்று தவித்திருந்த 
நமக்கெல்லாம் 
காலதேவன் நேரம் பார்த்து 
அறிமுகம் செய்கிறான் 
அஹிம்சை வழியில் 
தர்மம் காக்கப்படும் என்று 
அருள் பாலிக்கிறான்.

அவர் 
நாடாள்பவர்களுக்கு
இடைமறிக்கும் நந்தியாய்
தோன்றினாலும் 
சமூகத்தின்  நற்கதிக்கு 
வழிகாட்டும் ரூபமகிறார்
இன்னொரு காந்தியாய்
அன்னா ஹசாரே !
Series Navigationதீயின் தரிசனம்தொலைந்த ஒன்று.:-