புத்தன் பிணமாக கிடைத்தான்


காட்டிடையே வருவோர் போவோரின்
விரல்களை எல்லாம்
துண்டுதுண்டாய் வெட்டி நறுக்கி
மாலையாக்கிப் போட்டுத் திரிந்த
அங்குலிமாலாவின் துரத்தல் தொடர்கிறது.
புத்தன் அகப்படவில்லை
போதிமரத்தடியில் கிடைத்த ஞானத்தை
எல்லோருக்கும் வாரிவழங்கி
வெற்றிடமாய் போனேன்
வருத்தப்பட்டு உரையாடிக் கொண்டிருந்த
புத்தனின் கழுத்தில்
சயனைடு பாட்டில்கள் தொங்கின
இங்கொரு மண்டபத்தின்
இடிபாடுகளுக்கிடையே
புத்தன் பிணமாக கிடைத்தான்.
ஹெச்.ஜி.ரசூல்
Series Navigationஇழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளிமாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா