புனித ஜார்ஜ் கோட்டையும், மன்னார்குடி மங்காத்தாவும்.

புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க இடம்.
பல புனிதர்கள் அங்கிருந்து, நம்மை ஆண்டுள்ளனர்.
பல நேர்மையான,சிறந்த,அரசியல் அறிவும், நாவன்மையும்
கொண்ட பல தலைவர்கள் நாம் பார்த்துள்ளோம்.  ஓமந்தூரர்
 முதல், ஜெயலலிதா வரை பல முதன் மந்திரிகள்,
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.
தீடீரென்று, அரசியல் வானில், மன்னார்குடி மங்காத்தா
என்ற துர்நட்சத்திரம் ஒன்று தோன்றி, ஒரு  ரங்கத்து
மாமியை விழுங்கி, முடிவாக தமிழகத்தையும் விழுங்கப்பார்த்தது.
இந்த டிவி சீரியலை, பல பெண்கள் பார்த்து, தமிழ் நாட்டு
அரசியலை புரிந்துக் கொண்டனர். இதனால், அவர்கள்
 அன்றாடும் பார்க்கும் கண்ணீர் காவிய சீரியலகள்
 மார்க்கெட் இழந்து தவிக்கின்றனர்.
ஒரு பெண் நரி, சிங்க போர்வை போர்த்திக்கொண்டு,
ஒரு பெரிய ஆண் சிங்கக்கூட்டத்தை, கூவாத்தூர் காட்டில்
அடைத்து வைத்து, அவர்களுக்கு கிளுகிளூப்பூட்டும் பல
கதைகளை சொல்லி, சோர்வடையாமல் பார்த்துக்கொண்டது.
எதிர் காலத்தில் அடிக்க போகும் கொள்ளையில், பங்கு கேட்க
மாட்டேன் என்ற வாக்குறுதி கூடக் கொடுத்திருக்கும். அந்த
சிங்கங்களும், நாக்கில் தேனை தடவிக்கொண்டு, காலத்தை
கடத்திக் கொண்டிருந்தது. பாவம், அவர்களுக்கு தெரியாது ,
 “இது ஒரு நாள் வலையில் மாட்டிக்கொண்டு திண்டாடும்”.
இந்த மங்காத்தா, எப்படியோ போயஸ் தோட்டத்தில் நுழைந்து,
அங்குள்ள மாமியிடம், நட்புடன்  பழகி, மாமியின் தனிமையின்
துயரங்களை போக்க, பல படங்களை போட்டு காண்பித்து, பல
சதிராடங்களை, ஆடி, கடைசியாக சோறாக்கியாக
மாறிவிட்டக்கதையெல்லாம் நமக்கு தெரியும்.
இந்த சோறாக்கி, மாமியிடமிருந்து, அரசியல் ஞானத்தை
பெற்றேன் என்று கூறுவதுதான், உலக மகா பொய்யாக
தெரிகின்றது. இந்த ஒரு குவலிபிகேஷனை வைத்துக்
கொண்டு, பில்கேட்ஸ் அளவிற்கு சம்பாதித்த கொள்ளைக்கு,
இன்று முடிவு வந்தது.
ஆனால், இந்த மங்காத்தாவின் துணிச்சலுக்கு அளவேயில்லை.
நான், ஆயிரம் ஆண்களுக்கு சமம் என்று, சிகண்டியை போல்,
தோல் தட்டி கொள்வதும், பன்னீரைப்போல், ஆயிரம் பேரை
பார்த்துள்ளேன். என்னுடைய ஆணே(கணவர்), இங்கே
வாலை சுருட்டிக்கொண்டு படுத்துள்ளது. மற்ற
ஆண்களைத்தான், நான் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.
இனி யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற கர்வத்தை
அடக்க, நீதி தேவதையின் கண்கள், திறந்து, மங்காத்தாவை,
சுட்டெரித்தது.
இந்த தீர்ப்பு, பல நல்ல உள்ளங்களுக்கு, நீதியின் மேலும்,
நீதி மன்றங்களின் மீதும் மதிப்பையும், நம்பிக்கையும்
அதிகரித்துள்ளது.குமாராசாமி போன்ற, சில கருப்பாடுகள்
இருக்கதான் செய்யும்.
ஆனால், அந்த முடிவுகளை, கடைசியாக நீதீயே வென்றது.
இந்த தீர்ப்பு, பல அரசியல் நரிகளுக்கு ஒரு பாடமாகவும், இனி
அரசியலை வைத்துக்கொண்டு, பிழைப்பு நடத்த முடியாது
என்றும், பெரிய கரை வேட்டிகளை கட்டிக்கொண்டு, நாட்டிற்கு,
பொதுத்தொண்டு ஆற்ற அண்ணன் வருகின்றார் என்று, இனி
பேசுவது கொஞ்சம் குறையலாம்.
அதனால், அரசியல் தெரியாமலே, தமிழ் நாட்டை ஆண்டுவிட
 முடியும்,என்று இனி ஒருவரும் நினைக்கக்கூடாது. அம்மாவே,
நமது, பன்னீரை பற்றி பேசும் போது, அவர் படிப்படியாக,
அரசியலில் முன்னேறி, இந்த உயர்ந்த நிலைக்கு வநதுள்ளார்
என்றுதான் கூறியுள்ளார்கள்.
10 கோடி ரூபாய், எனக்கு ஒரு பட்டாணி. 4 வருட சிறை வாசம்,
அக்காவுக்காக, நான் செய்யும் நன்றி உணர்ச்சி என்று கூட,
அவருடைய விசிசுவாசிகளிடம் பேசி, முதலைக்கண்ணீர்
வடிக்கலாம், இந்த மங்காத்தா
சிறையிலிருந்து, வெளியே வரும் போது, ஏதோ கப்பலோட்டிய
 தமிழனை போன்ற உணர்வோ,  காமராசர் போன்ற உணர்வோ,
இவருக்கு வரலாம். ஆனால், நரி, நரிதானே !
வேடங்கள் அழிந்துவிட்டது. திரை முறிந்து விட்டது. போட்ட
 மேக்கப்பும் கலைந்து விட்டது. சுற்றியுள்ள காக்கா கூட்டமும்,
 தற்போது பரந்துவிடும். நான்கு வருடங்களுக்கு பிறகு,
மன்னார்குடி மண்தான் துணை.
சிறையா ? அல்லது ஜார்ஜ் கோட்டையா ? என்ற கேள்விக்கு
விடை கிடைத்துவிட்டது. இனி யாருக்கு, அந்த கோட்டை.
அந்த ஆட்சி அதிகாரம். குதிரை பேரம் ஆரம்பித்து விடும்.
எந்த குதிரை என்ன விலை என்று, மக்களுக்கு தெரியாது.
கரைவேட்டிகளே ! இனி அரசியலை பிழைப்பாக நடத்தவரும்,
இளம் நட்சித்திரங்களே !
உஷார், உஷார் !! நீதிமன்றங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.
நீதி தேவதை தராசு, இன்னும் சாயவில்லை.
Series Navigationதொடுவானம் 158.சிதைந்த காதல்