புரட்சித்தாய்

Spread the love

சேயோன் யாழ்வேந்தன்

ஒரு பெரிய புரட்சிதான்
சிறிய புரட்சிகளைத் தோற்றுவித்தது
சிறிய புரட்சிகள்
தத்தம் குட்டிப் புரட்சிகளைப் பெற்றெடுத்தன.
குட்டிப் புரட்சிகள்
தம் பங்குக்கு
துளித்துளிப் புரட்சிகளைப் பிரசவித்தன
சிறு துளிகள் பல்கிப் பெருவெள்ளமாகி
புரட்சித்தாயை அடித்துக்கொண்டுபோய்விட்டது!
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationகுப்பையும் சாக்கடையும் துணை!பொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம்