பெண்

ஜிகே விஷ்ணு

வாழ்வெனும் முழு நீள
திரையில் இவள்
ஏற்றப் பாத்திரங்களோ ஒன்று
இரண்டு அல்லவே..!

காட்சிக்கு ஏற்றவாறு ஏற்ற
வேடங்களில் மாற்றமும் ஏமாற்றம்இல்லாமல் சிறக்க
எப்படி முடிகிறதோ…!

அவன் நெஞ்சைக் கொள்ளை
கொள்ளும் செல்ல
மகளேன இமை காக்கவும்
எப்படி செய்கிறளோ
தன் மந்திர புன்னகையில்
சிக்கியதல் போலும்..!

தன் தோழமையின் தோல்வியில்
தன்தோள் சாய்த்து
கண் துடைத்து வெல்லென
சொல் கொடுத்து
வெல்கையில் தொலைத் தூரம்
நின்று ரசிப்பால்….!

அடுத்து தன் துணையின்
துண்யென நிற்க
இவள் துணிச்சல் அவன்
துணையாகி துணிவுக்
கொண்டு வாழ்வு வென்று
தலைவிழாது நிற்கிறான்..!

அவன் அணுவைத் தான்
வாங்கி தன்
இமையெனக் காத்திட ஈரைந்து
மாதம் சுமந்து
தன்னுயிர் பகுத்து பிள்ளையைப்
பெற்று எடுத்து
பெண்மையின் முழுமை
அடைந்து விடுகிறாள்…!

அவள் முழுமையைப் பற்றி
செல்லி முடிக்க
என் சொற்களும் போதவில்லையே
ஆதலால் பெண்ணியம்
போற்றி புகழுவோம்……!
வா தோழா………!

Series Navigationவிமர்சனங்களும் வாசிப்பும் மரங்கள்