பெருநிலா

Spread the love

அருணா சுப்ரமணியன்

என் மீது பெருங்கோபம்
இந்த வெண்ணிலவுக்கு …
நான் நிலவை பற்றி
எழுதுவதில்லை என்று..

முழுமதி ஒன்று எந்தன்
மடிமீது தவழ்ந்திருக்க
தேய்ந்தும் வளர்ந்தும்
மறையும் பிறைமதி
உவப்பதில்லை என்றேன்….

எவ்வாறாகினும்
என்னைக் கவர
வெகுவாய் அலங்கரித்து
கிட்ட வந்த பெருநிலா
தோற்று திரும்பி போனது
உன் பால்முகம் கண்டு……

Series Navigationஉவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினக் கவிதை- நவ : 23.தா(து)ம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கலாமா?