பெருமை

 

ஆதியோகி


++++++++
பெரிய இடத்தில் போய்
சேர்ந்து விட்ட பெருமையில்
பெரிதாய் ஆர்ப்பரித்து
ஆட்டம் போட்டது
கடலை அடைந்த நதி.
பாவம்‌‌… சுயமும், சுவையும்
இழந்து போனதை
உணர்ந்திருக்கவில்லை.‌‌..!
– ஆதியோகி

Series Navigationமாய யதார்த்தம்இது என்ன பார்வை?