பேசும் படங்கள் :::: டீசண்டா ஒரு ஆக்ரமிப்பு….

Spread the love

கோவிந்த் கோச்சா

ஒவ்வொரு தெருவும் சுத்தமாக அழகாக இருக்கனும் என்று வீடுகளின் மதில் ஓரம் சென்னையில் சிறு சிறு செடிகள் வைத்தார்கள். இதற்கு முக்கிய காரணம் எக்ஸ்னோரா முயற்சி… ஆனால் அது இப்போது கண்டுள்ள அவதாரம்…?

சென்னையில் ரோட்டை ஆக்கிரமித்து அன்றாட வயிற்று பசி தீர ஏதாவது சிறு கடை போடுபவர்கள் போலீஸ் கொண்டு அப்புறப்படுத்தப்படுவர்…. ஆனால் கீழ்கண்ட மாதிரியான ஆக்க்கிரமிப்புகள்…?

படத்தில் நீங்கள் காண்பது சென்னை இந்திரா நகரில் எடுத்தது.. தனி வீடு.. குறைந்தது 6கோடி போகும் இடம்… ஆனால் அது தாண்டி…. பாருங்கள் நடைபாதை அழகாக ஆக்கிரமிப்பு பண்ணப்பட்டுள்ள விதத்தை….

ஆனால் இது போன்ற சென்னையின் தெருக்களில் வீட்டாரின் ரோடு ஆக்கிரமிப்பு சர்வ சாதாரணம்…
அது மட்டுமல்ல… பல தெருக்களிலும் இரு புறமும் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும்…
ஆனால், பஞ்சம் பொழைக்கும் ஏழைகள் தெருவோரம் படுத்துத் தூங்கினால் தான் தவறு…
யார் திருத்துவார்… இல்லை யார் திருந்துவாரோ….
ஏன் இது விஷயத்தில் மாநகராட்சி நடவடிக்கை இல்லை…?

கோவிந்த்…

Series Navigationவானம் வசப்படும்.பஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி