போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2022)

Spread the love

 

போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2022)

மூலம் ஆங்கிலம் : ஜான் மெக்ரே
(கனடா போர்த் தளபதி)
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

********************

போர்த் தளங்களில் அணி அணியாய்ப்
பூத்துக் கிடக்கும்,
எண்ணிலா
செந்நிறப் பாப்பி மலர்கள்
சிலுவைகளுக்கு இடையே!
நெஞ்சை உலுக்கும் காட்சி!
மேலே பாடிப் பறக்கும் குயில்கள்
பயம் ஏதுமின்றி,
கீழே பீரங்கிச் சத்தம் மெதுவாய்க்
கேட்டுக் குறையும்!

 

செத்துப் போனது நாங்கள்!
சில நாட்களுக்கு முன்பு பூமியில்
சீராய் வசித்தவர் நாங்கள்!
காலைப் பொழுதை உணர்ந்தோம்!
மாலைப் பொழுதில் மங்கிச்
செங்கதிர் மறைவதைக் கண்டோம்.
நேசித்தோம்,
நேசிக்கப் பட்டோம் நாங்கள்!
இப்போது
போர்த்தளப் புழுதியில்
வீழ்ந்து கிடக்கிறோம்!

 

பகைவரோடு
எம் போரைத் தொடர்வீர் !
தளரும் எமது கைகள்
தருவது
உமது கைக்கு
எரியும் தீப்பந்தங்கள்!
ஏந்திக் கொண்டு தாக்குவீர்.
இறந்தவர் நம்பிக்கை
நிறைவேறாது போனால் ,
உறக்கம் வாராதெமக்கு!
போர்த் தளம் யாவும்
எண்ணிலா
செந்நிறப் பாப்பி மலர்கள்
செழித்துக் குலுங்கினும்!

******************

பதிவாசிரியரைப் பற்றி

 

சி.ஜெயபாரதன்

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.

இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ்விலாசம்