மக்களாட்சி

Spread the love

 

 

வாக்கு வெள்ளத்தில்

முறிந்து வீழ்ந்தன

சில நூற்றாண்டு மரங்கள்

இடிந்துவிட்டன

சில கொத்தளங்கள்

 

வெள்ளமும்

வெயிலும்

சுழற்சி

மையத்தண்டாக

மக்களாட்சி

 

ஆட்காட்டி விரல்களால்

மாறியிருக்கிறது

ஆட்சித் தோட்டத்தின்

அதிகாரங்கள்

 

சில புதிய மரங்கள்

சேர்க்கப்படலாம்

சில பழைய மரங்கள்

கழிக்கப்படலாம்

அதற்குமுன்

 

ஆணிவேரைத் தோண்டிய

பெருச்சாளிகளை

விரட்டுங்கள்

இல்லையேல்

அசாதாரண வெற்றிக்கும்

அற்ப ஆயுளே

 

இந்தியாவின் இமயம்

மக்களாட்சி

இமயம் இருக்கும்வரை

இந்தியா பேசப்படும்

 

அமீதாம்மாள்

Series Navigation