மந்தமான வானிலை


    அவர்கள் எப்போதும்

    தயாராக இருக்கிறார்கள்

   

    வரவேற்பு வளைவுகள்

    வைக்க

    வாகனங்களில்வந்து

    வரவேற்க

    சுவரில் எழுத

    சுவரொட்டிகள் ஒட்ட

    நாளிதழில்

    முகம்காட்ட

    பொன்னாடை போர்த்த

    மாலைகள் அணிவிக்க

    முப்போதும்

    தயாராகவே இருக்கிறார்கள்

 

    அந்தநொடியில்

    எந்தக்கவலையுமின்றி

    கரையவும்

    கரைக்கவும்

    காத்திருக்கிறார்கள்

 

    எங்கும் நிலவும்

    இந்த வானிலையில்

    மின்ன விருப்பமில்லா

    நட்சத்திரங்களுக்காக

    நாகரீகம்

    தலைவணங்குகிறது

      

    மனப்பாலருந்தி

    வலம்வரும்போது

    கதவைச்சாத்தச்சொல்கிறது

    கூச்சம்

 

    சரியில்லாத

    வானிலையோடுதான்

    பகல் இரவு உருள்கிறது

    பள்ளம் நோக்கி

 

 

  

 

 

 

    ஆனால் அவர்கள்

    எப்போதும் தயாராகவே

    இருக்கிறார்கள்

   

    பள்ளமில்லாத

    பள்ளத்திலிறங்காத

    பயணத்தையெண்ணி

    குமைகிறது குரங்கு

    புகைவண்டியாய்

 

(24.1.2014  பிற்பகல் 3.30க்கு முஸ்தபாவில் சாமான்வாங்கும்போது சிங்கப்பூர் கலைஞர் ஜேம்ஸ் துரைராஜ் அவர்களுடன் பேசும்போது தோன்றியது)

Series Navigationஆத்மாநாம்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவுநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்வலி