மயிலிறகு…!

Spread the love
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

பத்திரமாக வைத்துக்கொள்ள
மயில் இறகின் ஒரு இழை இருந்தது

என்னிடத்தில்
நீளமான இழையைச்
சரிபாதியாய்க் கிள்ளி
ஒன்றை
என் சிநேகிதி கொடுத்தது.புத்தகத்தின் நடுவிலே வைத்து
பென்சிலை திருவின தூளை அதற்கு

உணவாக கொடுத்து
நாளையோ நாளை மறுநாளோ
குட்டி போடும் என்று
தவிப்போடு காத்திருந்த நாட்கள் !புத்தகம் திறக்கப்படும்

ஒவ்வொரு நாளும்
ஒரு குட்டி மயிலிறகைத் தேடும் மனம் !
வருடப்படும் நட்புணர்வில்
நட்பை தேடுகிறது
கடந்து போன நிகழ்வின்
நினைவுத் துளிகளில்என்றோ நடந்து முடிந்த பால்ய நிகழ்வு
பசுமை கோர்த்து சிரிக்கிறது !
உறக்கம் வரா இரா பொழுதின்

இறுக்கத்தில்
அணு அணுவாகப்
பின்னோக்கி பயணித்து

++++++++++++++++++

Series Navigationபொய் சொல்லும் இதயம்இதயம் துடிக்கும்